பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.48 பூர்ணசந்திரோதயம்-3 சஞ்சலத்தினாலும் உயிர் போய் விடக்கூடிய நிலைமையை அடைந்து விட்டவள் போலத் துயரமே வடிவாக நின்று, கரைகடந்த பரிதாபத்தோடு அவரது முகத்தை உற்று நோக்கினாள். உடனே மாசிலாமணிப் பிள்ளை அவளை உருக்கமாகவும் வாஞ்சையோடும் பார்த்து, 'லீலாவதி நீ தைரியமாக இருப்பாய் என்றல்லவா நான் நினைத்துக் கொண்டிருந்தேன். இதற்குள் நீ இவ்வளவுதூரம் தளர்ந்து போய் விட்டாயே! இப்போதே நீ இப்படி விழுந்துபோய் விட்டால், இனி நடக்க வேண்டிய பெரிய காரியங்களை எல்லாம் நீ எப்படிச் செய்து முடிக்கப்போகிறாய்? என்றைக்காவது ஒருநாள் இது நேரும் என்று நாம் எதிர்பார்த்ததுதானே. இதற்கு இன்றைய தினந்தான் ஏற்ற நாள் போல் இருக்கிறது. என்னை இவர்கள் பிடித்துக்கொண்டு போகட்டும். அங்கே இவர்கள் என்னைக் கடித்தா விழுங்கிவிடப் போகிறார்கள். நான் போனால், அங்கே சில தினங்கள் இருந்துவிட்டு மறுபடியும் வந்துவிடுகிறேன். நீ அநாவசியமாக ஏன் உன் மனசை வருத்தி அதைரியத்தை உண்டுபண்ணிக் கொள்ளுகிறாய்? உன்னுடைய தைரியத்தைக் கொஞ்சமும் கைவிடாதே" என்று கூறி அவளைத் தேற்ற முயன்றார். லீலாவதி அப்போதும் ஆறுதல் அடையாத வளாய் நின்றாள். ஆனாலும், அத்தனைக்கும் தானே காரணமானவள் என்பதைப் பற்றித் தனது புருஷன் சிறிதும் சந்தேகிக்கவில்லை என்று அவள் தனக்குள்ளாகவே நிச்சயித்துக் கொண்டு முன்னிலும் அதிக மனோதிடமும் துணிவும் அடைந்தவளாக நின்றாள். - அப்போது மாசிலாமணிப்பிள்ளை இன்ஸ் பெக்டரை நோக்கி, "ஐயா! நான் என்சம்சாரத்தோடு தனியாகச் சில குடும்ப ரகசியங்கள் பேச வேண்டும்! அதற்கு நீங்கள் அனுமதி கொடுப்பீர்கள் அல்லவா?' என்றார். இன்ஸ்பெக்டர், 'ஆகா பேசலாம். ஆனால், வேறே அறைக்குப் போகாமல் இவ்விடத்திலேயே ஒரு பக்கமாக ஒதுங்கியிருந்து ரகசியமாகப் பேசிக்கொள்ளுங்கள் என்றார்.