பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28-வது அதிகாரம் பாளையக்காரருக்குப் பந்தய வெகுமதி பூர்ணசந்திரோதயம் என்ற பெண்மானை வெல்வதற்காக ஏற்படுத்தப்பட்டிருந்த அபூர்வமானபந்தயம் முடிவடைய ஆறு நாட்கள் கழிந்தன அல்லவா? அதன் பிறகும் சில தினங்கள் சென்றன. ஒருநாள் மாலை நேரத்தில், தஞ்சை சகாநாயக்கர் வீதியிலிருந்த சூரக்கோட்டை பாளையக்காரரது வீட்டில் ஒரு பெருத்த விருந்து தயாராகிக் கொண்டிருந்தது ஆகையால், அவ்விடத்தில் அதிக தடபுடலும், ஊக்கமும், ஆரவாரமும் ஏராளமாகக் காணப்பட்டன. அந்த வீடு முழுதும் தேர்ச் சீலைகள், தொங்கல்கள், வாழைமரங்கள், தோரணங்கள், ஒட்டு வேலைகள், படங்கள், பதுமைகள், பூத்தொட்டிகள் முதலியவைகளால் வெகு சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. வீட்டு வாசலிலும் உட்புறத்திலும் தொங்கவிடப்பட்டிருந்த சரவிளக்குகள் வைரக்கற்களால் ஆக்கப்பட்ட மாலைகள் போலக் காணப்பட்டு பட்டப்பகலைவிட அதிகப் பிரகாசத்தை உண்டாக்கியவண்ணம் நிரம் பவும் விநோதமாகக் காணப் பட்டன. மற்ற இடங்களைக் காட்டிலும் பன்மடங்கு சிறப்பாக வும் உன்னதமாகவும் மனோகரமாகவும் சிங்காரிக்கப் பட்டிருந்த கூடத்தில், ஆறு விருந்தினர்கள் உட்கார்ந்து போஜனம் செய்வதற்குத் தேவையான ஆசனங்கள் போடப்பட்டிருந்தன. அவைகளுக்கு அருகில் தங்கம் வெள்ளி முதலியவைகளினால் ஆன தலைவாழை இலைகள், தொன்னைகள், கூஜாக்கள், குவளைப் பாத்திரங்கள் முதலியவைகள் அதனதன் இடத்தில் அழகாக வைக்கப்பட்டிருந்தன. மடைப் பள்ளியில் நளபாகம் பீம பாகங்களைத் தோற்கச் செய்த மகா இனிமையான அறுசுவைப் பதார்த்தங்களும், சித்திரா அன்னங்களும், பrண பாயசங்களும், அபரிமிதமாக நிறைந்து கமகமவென்று நறுமணத்தையும் இன்சுவையையும் வெகுதூரம் வரையில்