பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 155 அள்ளிவீசி, அடுத்த தெருக்களில் செல்வோரது நாவில் தண்ணிர் ஊற்றெடுக்கச் செய்தன. மாதுரியமாகக் கனிந்த உயர்ந்த ஜாதிப் பழவகைகளும், தேனும், பாலும், பாகும், புத்துருக்கு நெய்யும் பெருவெள்ளமாகச் சேகரித்து வைக்கப்பட்டிருந்தன. போஜனம் நிறைவேறிய பிறகு வழங்குவதற்காக ரோஜா, ஜாதி மல்லிகை முதலிய உன்னத ஜாதிப் புஷ் பங்களாலான மாலைகளும், செண்டுகளும், பன்னிர், பச்சைக்கற் பூரம் குங்குமப்பூ, தங்கரேக்கு முதலியவைகள் கலந்த தாம்பூலங்களும் கலவைச் சந்தனமும் தங்கத் தட்டுகளில் நிறைந்து நறுமணத்தை அள்ளித் தூவிக் கொண்டிருந்தன. பெருத்த மகாராஜர்களுக்குத்தகுந்த படி சகலமான ஏற்பாடுகளும், முஸ்தீபுகளும் செய்யப்பட்டிருந்தன. இரவு மணி ஏழரை ஆனது. சூரக்கோட்டைப் பாளையக்காரர் பட்டும் ஜரிகைகளும் நிறைந்த விலை உயர்ந்த ஆடைகளையும் ஆபரணங்களையும் அணிந்தவராய்ப் புதிய மணமகன்போலத் தோன்றி, ஒவ்வோர் இடமாகச் சென்று தமது சகலமான அலங்காரங்களையும் ஏற்பாடுகளையும் தயாரிப்புகளையும் கண்டுகளித்து அளவற்ற ஆனந்தமும் திருப்தியும் அடைந்த வராய் அத்தனைகாரியங்களையும் செய்து வைத்த தமது முக்கிய குமாஸ்தாவைப் பார்த்து, அவனை அபாரமாகப் புகழ்ந்து கொண்டாடி, 'பலே, பேஷ் சாமண்ணாராவ்! நான் கடன் வாங்கிக் கொடுத்த சொற்பத் தொகையை வைத்துக் கொண்டு நீ இவ்வளவுதூரம் சிறப்பாகக்காரியத்தை நடத்துவாயென்று நான் கொஞ்சம்கூட நினைக்கவேயில்லை. இளவரசரும், மற்றவர் களும் வந்துபார்த்தால் அப்படியே ஸ்தம்பித்துப்போய், மூக்கில் விரலை வைக்கும்படியாக, நீ அவ்வளவு திறமையாக எல்லா வற்றையும் செய்திருக்கிறாய். அதுபோகட்டும்; நான் உனக்கு இன்னம் எத்தனை மாசத்துச் சம்பளம் கொடுக்க வேண்டும்? சொல்; எப்படியாவது யாரிடத்திலாவது கடன் வாங்கி நான் நாளையதினம் உனக்குக் கொடுத்துவிடுகிறேன்' என்று நன்றியறிதலும், உருக்கமும் நிறைந்தவராய்க் கூறினார்.