பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 159 வாசலில் வந்து நின்றது. உடனே சாமண்ணாராவ் உள்ளே ஓடிவந்து சேரங்குளம் இனாம்தார் வந்துவிட்டதாகக் கூறினான். அடுத்த நிமிஷத்தில் அவரும் அங்கே வந்து சேர்ந்தார். உடனே சூரக்கோட்டைப் பாளையக்காரர் இனாம்தாரை வரவேற்க எதிர்கொண்டு சென்று மகிழ்ச்சியாகப் புன்னகை செய்து, 'வரவேண்டும்; வரவேண்டும்; இந்த ஆசனத்தில் உட்காருங்கள்' என்று கூறி உபசரிக்க, இனாம் தாரும் சந்தோஷமாகப் புன்னகை செய்தவராய் ஆசனத்தில் அமர்ந்து, 'பாளையக்காரரே! நீங்கள் இந்த விருந்து விஷயமாக எனக்கு அனுப்பிய கடிதத்தைப் பார்த்த உடனே என் மனசில் உண்டான ஆச்சரியம் இவ்வளவு அவ்வளவு என்று சொல்லவே முடியாது. நான் பிறந்த முதல் இதுவரையில் எந்தக் கடிதத்தைக் கண்டும் இவ்வளவு அதிகமாக நான் ஆச்சரியப்பட்டதே இல்லை' என்றார். அதைக் கேட்ட பாளையக்காரர், “ஏன் அப்படி? நான் எழுதி யதில் அவ்வளவு அபாரமான ஆச்சரியத்தை விளைக்கக்கூடிய விநோத சங்கதி என்ன இருந்தது? இதற்குமுன் இப்படிப்பட்ட விருந்தையே நான் நடத்தியது இல்லையா? அல்லது, இந்த விருந்துக்குப் பிறகு நான் இனி விருந்தே நடத்தப் போகிற தில்லையா? இதில் அப்படிப்பட்ட புதுமை என்ன இருக்கிறது?" என்று பரம சந்தோஷம் அடைந்தவர்போல நடித்துப் புன்னகை செய்து பேசினார். இனாம்தார் முன்னிலும் அதிக மகிழ்ச்சியும் புன்னகையும் தோற்றுவித்து, 'இது கடைசி விருந்தாக இருக்கும் என்று நான் ஏன் நினைப்பேன்? அப்படியொன்றும் நான் நினைக்கவில்லை; வேறே எவ்விடத்துக்குப் போகவேண்டியிருந்தாலும் அதை யெல்லாம் ஒத்தி வைத்துவிட்டுத் தவறாமல் இங்கே வரவேண்டும் என்றும் இது நாம் மருங்காபுரி ஜெமீந்தாருடைய மாளிகையில் ஏற்படுத்திய பந்தயத்துக்குச் சம்பந்தப்பட்டது go.5.III–11