பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i82 பூர்ணசந்திரோதயம்-3 காரியத்தை முடித்துக் கொடுப்பதாகவும் சொன்னாள். அதுபோலவே, மறுநாள் சாயுங்காலம் வம்புலாம் சோலையில், ஹேமாபாயி, எனக்கும் அந்தப் பெண்ணுக்கும் பழக்கம் செய்து வைத்தாள். பிறகு அவள் இரண்டு நாள்கள் வரையில் ஓயாமல் முயற்சித்து போதனை செய்து பூர்ணசந்திரோதயத்தின் மனம் மாறும்படி செய்து, அவளை இணங்க வைத்தாள். அவளுடைய ஜாகையான ஜெகன்மோகன விலாசத்துக்கு நான் வந்தால், ரகசியம் வேலைக்காரருக்கு எல்லாம் தெரிந்து வெளியில் பரவிப் போகும் என்று பயந்து அவள் என்னை அங்கே வரச் சொல்லாமல், அவளே ஹேமாபாயியின் வீட்டுக்கு ரகசியமாக வந்து சேர்ந்தாள். நான் அவளை அவ்விடத்தில் கண்டேன். இருவரும் சந்தோஷமாக இருந்தோம். அப்படி அவள் வந்தது எப்போது என்று நீங்கள் கேட்கலாம். நம்முடைய சபாநாய கரின் தினமான வெள்ளிக்கிழமை ராத்திரிதான் எங்கள் இருவருக்கும் சிநேகமானது' என்றார். - அந்த வரலாற்றைக் கேட்ட ஜெமீந்தார் இளவரசரது முகத்தைக் கூர்ந்து பார்த்தவராய், “என்றைக்கு? வெள்ளிக் கிழமை அன்றோ? எத்தனை மணிக்கு? என்றார்: பாளையக்காரர், 'வெள்ளிக்கிழமை ராத்திரி எட்டு மணிக்கே நான் ஹேமாபாயியின் வீட்டுக்குப் போய்க் காத்திருந்தேன். அவள் சரியாக ஒன்பது மணிக்கு அங்கே வந்து சேர்ந்து விட்டாள்' என்றார். ஜெமீந்தார், 'ஓகோ அப்படியா ஒன்பது மணிக்குச் சந்தித்த நீங்கள் அவ்விடத்திலிருந்து பிரிந்து போனபோது மணி என்ன இருக்கும்?' என்றார். பாளையக்காரர், 'ஒன்பது மணி முதல் பதினொன்றரை மணி வரையில் நாங்கள் அங்கே இருந்தோம். அதற்குமேல் அவள் அவ்விடத்தைவிட்டுப் போனாள் என்றார். ஜெமீந்தார், "சரி; ஏதோ எழுத்து மூலமான ருஜு