பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 199 றார்கள். அந்தச் சங்கதியை அறிந்து கொள்ளாமல் பாளையக்காரர் முழுமோசமாக இந்த அபாண்டப் புளுகைச் சொல்ல வந்ததுதான் என்னால் சகிக்கமுடியாததாக இருக்கிறது. இந்த அம்மாள் உண்மையிலேயே எங்களுடைய ஜாகைக்கு இந்திருந்தும், இந்தப் பாளையக்காரர் சொன்னதுபோன்ற பொய்யைச் சொல்ல, எங்களுக்கு மனம் துணியவில்லை. இவ்வளவு வயசும், உலக அனுபவமும் அடைந்த பாளையக்காரர் இந்த விஷயத்தில் இப்படி மதியினமாக நடந்து கொள்வார் என்று நான் கனவிலும் நினைக்கவே இல்லை. அது நிற்க இந்த அம்மாள் விஷயத்தில் பாளையக் காரர் மாத்திரமல்ல; நாம் அறுவருமே பெருத்த தவறுதல் செய்துவிட்டோம். இவர்களுடைய உண்மையான யோக்கியதையை உள்ளபடி தெரிந்து கொள்ளாமல் கேவலமாக மதித்து நாம் இந்தப் பந்தயத்தை ஏற்படுத்தியதே பெருத்த குற்றம். அதனால் இந்த அம்மாளுக்குப் பலவகைப்பட்ட மனவேதனையும், தேகப் பிரயாசையும், பழிப்பும் ஏற்பட்டன. ஆகையால், நாம் எல்லாரும் நம்முடைய ஆழ்ந்த விசனத்தையும், அனுதாபத் தையும் வெளியிட்டு மன்னிப்புக் கேட்டுக் கொள்ளக் கடமைப் பட்டிருக்கிறோம் என்று நினைக்கிறேன். அதுவுமன்றி, இப்போது இங்கே இருக்கும் முப்பதினாயிரம் ரூபாயை நாம் வேறு எந்த வகையில் உபயோகப்படுத்துகிறது என்பது தோன்றாமல் இருப்பதால், நாம் எல்லோரும் செய்த பெருத்த தவறுக்கு ஒர் அபராதமாக இந்தத் தொகையை நாம் இந்த அம்மாளுக்கே சேர்த்துவிடலாம் என்று நினைக்கிறேன்' என்றார். அதைக்கேட்ட இளவரசர் முதலிய எல்லோரும், 'ஆம்; ஆம் நீங்கள் சொல்வதே சரி; அதுதான் கிரமம்; அப்படியே செய்து விடுங்கள் என்று கூறி அதை ஏற்றுக்கொள்ள, உடனே சபாநாயகர் எழுந்து சாமளராவைக் கூப்பிட்டு அவனிடத்தில் முப்பதினாயிரம் ரூபாய் பெறுமானமுள்ள எல்லா நோட்டுக்