பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் . 201 பலவிதமான சந்தேகங்களும் எண்ணங்களும் தோன்றி வதைக்கலாயின. தான் அதற்குமுன் பழக்கம் இல்லாத அன்னிய புருஷன் என்ற எண்ணமும் கூச்சமும் பயிர்ப்பும் சிறிதுமின்றி ஆந்தப் பெண் தன்னை அவ்வளவு ஆவலோடு கட்டிக் கொண்டது, அவனுக்குச் சிறிதும் நம்பக்கூடாத கனவின்காட்சி போல இருந்தது. தன்னிடத்தில் அவள் காதல் கொண்டிருந்தா லன்றி, அவள் அவ்வாறு லஜ்ஜையில்லாமல் துணிந்து நடப்பது சாத்தியம் இல்லாத விஷயம் என்ற எண்ணம் அவனது மனதில் தோன்றிவிட்டது. ஆனாலும், இன்னொரு சந்தேகமும் உண்டாயிற்று. அவள் அரும்பாடுபட்டு அந்தச் சுவரைக் குடைந்துகொண்டு இப்பால் வந்ததனாலும், மறுபடியும் திரும்பித் தனது அறைக்குப் போய் விட முயன்றதனாலும், நிரம்பவும் தளர்வடைந்து களைத்துப் போயிருக்கக்கூடும் என்ற எண்ணமும் உண்டாயிற்று. அதுவுமன்றி, அந்த நிலைமையில் தாங்கள் இருவரும் தனியாக அதே அறையில் இருந்தால் மறுநாள் காலையில் அந்த விஷயம் போலீஸ் கமிஷனருக்குத் தெரிந்துபோகும். ஆதலால், தான் சுவரைக் குடைந்து தப்பித்துப்போக முயன்ற குற்றத்துக்குத் தனக்கு ஏதேனும் கொடிய தண்டனை கிடைக்குமோ என்ற பிரமாதமான திகில் உண்டாகி இருப்பதும் சகஜம் என்ற நினைவும் எழுந்தது. அதுவுமன்றி, அவள் உண்மையிலேயே பதிவிரதா ஸ்திரீயாக இருந்து, தான் அந்த இரவு முழுதும் ஒரு யெளவனப் புருஷனோடு தனியாக இருந்ததைக் கருதி, அன்னியர் தனது கற்பைப் பற்றி ஏதேனும் தவறான அபிப்பிராயம் கொண்டு விடப் போகிறார்களே என்று பெரிதும் அஞ்சுகிறவளாக இருந்தாலும் இருக்கலாமென்ற ஐயமும் தோன்றியது. ஆகவே, தனது தேகப்பிரயாசையோடு, மேலே கூறப்பட்டபடி மனதில் தோன்றிய திகிலும் அச்சமும் ஒன்றுகூடி, அவளை ஒரே காலத்தில் வருத்துவதால், நிரம்பவும் மெல்லியதன்மையுடைய அந்த யெளவன ஸ்திரீ சகிக்கமாட்டாத மயக்கமும் கலக்கமும் அடைந்து, தன்னை மறந்து அவ்வாறு கட்டியணைத்துக்