பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 பூர்ணசந்திரோதயம்-3 கொள்வதும் சகஜமாக நேரக்கூடுமோ என்ற சந்தேகமும் நமது உத்தமகுணப் புருஷனது மனதில் பட்டது. ஆகையால், அவன் எதையும் நிச்சயமாக நிர்ணயிக்க மாட்டாதவனாய்த் தாமரை இலைத் தண்ணிர் துளி போலத் தத்தளித்து இரண்டொரு நிமிஷ நேரம் ஸ்தம்பித்து ஊமை போல நின்றான். அவளது தேகம் தன்மீது உராய்வதும் அவள் தன்னை இறுகக்கட்டிக் கொள்வதும் அவனது மனதில் பலவித விகாரங்களை எழுப்பின. ஆகையால் அப்படிப்பட்ட அபாயகரமான நிலைமையில் தான் நீடித்து நிற்பது தவறாக முடியும் ஆதலால் தான் தன்னை விடுவித்துக்கொண்டு விலகி நிற்க வேண்டும் என்ற ஒருவிதமான மனவுறுதியை அவன் கொண்டான் ஆனாலும், தான் திடீரென்று அவளைவிடுவதனால், அவள்மயங்கிக் கீழே விழுந்து தலையை உடைத்துக் கொள்ளப் போகிறாளோ என்ற எண்ணத்தினாலும் கவலையினாலும் மேற்கொள்ளப்பட்ட வனாய், அவன் அவளது பிடிக்குள் அகப்பட்டபடியே நின்றான். அந்தப் பெண் நிரம் பவும் அபாயகரமான தேக ஸ் திதியில் இருக்கையில், தனது மனம் அவள் விஷயத்தில் அநுதாபம், இரக்கம், அவளை எப்படியாவது காப்பாற்றவேண்டும் என்ற ஜீவகாருண்யம் ஆகிய மூன்று பரோபகாரமான உணர்ச்சிகளைத் தவிர வேறு எவ்விதமானதுர்விகாரங்களையும் கொள்ளத் தான் இடம் கொடுக்கக் கூடாது என்ற ஓர் உறுதியைக் கொண்டவனாய் அவன் சிறிது நேரம் திடமாக இருந்தான். ஆனாலும், அவள் மேன்மேலும் செய்த பலவித ஸ்ாகலங்களைக் காணக் காண, அந்த நிலைமை, அவனால் சிறிதும் பொறுக்க முடியாத பரம சங்கடமான நிலைமையாக இருந்தது. ஆகவே, அவன் அவளைப் பார்த்து, 'அம்மா இந்திராபாயீ உன்னுடைய உடம்பு என்ன செய்கிறது? ஏன் இப்படி என்னைப் பிடித்துக் கட்டிக் கொள்ளுகிறாய்? எதற்காவது பயந்து இப்படிச் செய்கிறாயா? இன்னம் பொழுது விடிய வெகு நேரம் இருக்கிறது. அதற்குள் நீ உன்னுடைய அறைக்கு எப்படியும் போய்விடலாம். நீ கொஞ்சநேரம் இந்தப்