பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 17 என்ன நியாயம் இருக்கிறது? நீங்கள் செய்ய நினைக்கும் அக்கிரமச் சண்டையைத் தடுப்பதற்காக நான் முன்வருகிறேனே அன்றி உங்களைப்போல யாதொரு காரணமும் இல்லாமல் அநியாயச் சண்டைக்கு வரவில்லையே! - என்று அழுத்த மாகவும் உறுதியாகவும் கூறினான். அதைக் கேட்ட அம்மாளு அதற்குமேல் என்ன செய்வது என்பதையாவது, என்ன சொல்வது என்பதை யாவது அறியாதவளாய்த் தத்தளித்து நெருப்பின்மீது இருப்பவள் போலத் துடிதுடித்துக் கண்ணிர்விட்டுக் கலங்கி அழுதவண்ணம் நிரம் பவும் பரிதாபகரமாகத் தனது கையைப் பிசைந்து கொண்டு "ஐயோ! இந்த தர்மசங்கடத்துக்கு நான் என்ன செய்வேன்! நாங்கள் பூனாவுக்குப் போகக்கூடாது என்கிறீர்கள். வீட்டுக்குத் திரும்பிப் -போகவும் மார்க்கம் இல்லாமல் இருக்கிறது. இந்தச் சமயத்தில் என்னுடைய தாயாரே நேரில் இங்கே இருந்தால், எல்லாப் பொறுப்பும் அவளைச் சேர்ந்ததாகிவிடும். எனக்கு இவ்வளவு கஷ்டமிருக்காது. இந்த விஷயத்தில் நான் மாத்திரம் எந்த முடிவையும் செய்வதற்கில்லை. என்னுடைய சிறிய தாயார் ஒருத்தி இருக்கிறாள். அவளும் என் தங்கை மார்களும் எதையும் ஒப்புக் கொள்ள வேண்டும். அவர்களெல் லாரும் வெளியில் போயிருக்கிறார்கள்; சாயுங்காலம் திரும்பி வரப்போகிறார்கள்; எவரும் எதிர்பார்க்காத இந்த விஷயத்தை நான் உடனே அவர்களிடம் தெரிவித்தால் அவர்களுக்கு இது ஒரு பெரிய இடி விழுந்ததுபோல இருக்கும். இருந்தாலும் நான் அவர்களுடன் கலந்து யோசனை செய்து எங்களுடைய முடிவைத் தெரிவிக்கிறேன். - கலியான :- ஒ! அப்படியே செய்யலாம். எனக்கு அவசரம் ஒன்றுமில்லை. உங்களுக்கு வேண்டிய அளவு அவகாசம் எடுத்துக்கொண்டு நன்றாக ஆழ்ந்து யோசனை செய்து முடிவைச் சொல்லுங்கள். அதுவரையில் நான் தூரவே இருக்கிறேன்; அல்லது இந்த இடத்தைவிட்டே போய்