பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 பூர்ணசந்திரோதயம்-3 கடைசித் துளி ரத்தமும் உயிரும் வெளியில் வந்துவிடுகிற வரையில், நான் உங்களை விடப் போகிறதில்லை. அப்போதுதான் நான் உங்களிடம் கொண்டுள்ள காதலின் உறுதியும் என் கற்பின் உறுதியும் உள்ளபடி வெளியாகும். நான் கண்டவர்மேல் ஆசைப்படும் பரத்தையா, அல்லது, ஒரே ஒருவரைக் காதலித்து அவர்பொருட்டு என் உயிரைக்கூட ஒரு திரணமாக மதித்து, அவருடைய காலடியிலேயே இறந்து போகக்கூடிய உத்தம ஜாதி ஸ்திரீயா என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள் என்று கூறியவண்ணம் அவனைக் கொடி போலத் தழுவி மறுபடியும் கொஞ்சத் தொடங்கினாள். முதலில் அவள் விசிப்பலகையில் போய் விழுந்து அடி பெற்றதே கலியாணசுந்தரத்தின் மனதில் சுருக்கெனத் தைத்து, அவனது மனம் இரங்கிக் கலங்கும்படி செய்தது. அதன்பிறகு அவளது விஷயத்தில் தான் பலாத்காரத்தை அதிகமாக உபயோகிக்கக்கூடாது என்ற உறுதியை அவன் கொண்டவனாக இருந்தான். ஆனாலும், அந்த உறுதி சிறிது நேரத்தில் மாறிப்போய் விட்டது. அவள் செய்த பொறுக்கவொண்ணாத சேஷ்டையினாலும், வரம்புகடந்த மோகவிகாரச் செய்கைகளி னாலும், அவன் அளவற்ற ஆத்திரமடைந்து தன்னை மறந்து அவளை மறுபடியும் தள்ளிவிட, அவள் வேரற்ற மரம்போலத் தரையில் விழுந்தாளல்லவா? அதைக் காணவே, கலியான சுந்தரத்தின் மனதில் பெருத்த திகிலும் கலவரமும் அனுதாபமும் உண்டாகி அவனைக் கலக்கத் தொடங்கின. தான் அவளது விஷயத்தில் மகா கொடுமையாக நடந்துவிட்டதாய் அவனது மனம் குத்தத் தொடங்கியது. அவளது பிடிவாத குணமும், அவள் மேன்மேலும் செய்த சேஷ்டைகளும் சகிக்க முடியாதன வாகவும், அவனை வெகு சுலபத்தில் துன்மார்க்கத்தில் இறக்கிவிடக் கூடியவையாகவும் இருந்தன. தான் எவ்வளவு தூரம் பயந்து வேண்டிக் கொண்டாலும், அவள் தனது எண்ணத்தை மாற்றிக் கொள்ளக் கூடியவளாகத் தோன்ற