பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 பூர்ணசந்திரோதயம்-3 விருவிருத்துப் போன கலியாணசுந்தரம், தரையில் வேரூன்றிப் போன மரம் போல அந்த இடத்தைவிட்டு நகராமல் உறுதியாக நின்றவனாய் அவளை நோக்கி, 'இந்திராபாயி! நீ செய்வது முழுதும் சண்டிவழக்காக இருக்கிறதேயன்றி வேறல்ல. நீ சொல்லும் வார்த்தைகளையும், நீ நடந்துகொள்ளும் விதத்தையும் வேறே யாராவது பார்ப்பார்களானால், நீ ராட்சசியோ, அல்லது பேய் பிசாசைச் சேர்ந்தவளோ என்று நினைப் பார்களே தவிர, உன்னுடைய அபூர்வமான மன உறுதியைப் பற்றி யாரும் உன்னைப் புகழமாட்டார்கள். நீ ஒரே புருஷனிடத்தில் காதல் கொண்டிருப்பதாகவும் அவன் பொருட்டு எப்படிப்பட்ட தேக அவஸ்தையையும் பொறுத்துக் கொள்வதாகவும் உயிரையும் விட்டுவிடத் தயாராய் இருப்பதாகவும் சொல்லிப்பெருமை பாராட்டிக் கொள்ளு கிறாய். உன்னுடைய மன உறுதியும் தீரமும் ஆண்பிள்ளை களிடத்தில் கூட இருப்பது சந்தேகந்தான். அந்த விஷயத்தைப் பற்றி நான் உன்னை நிரம்பவும் மெச்சுகிறேன். ஆனால், இந்த விஷயத்தில் உன்னுடைய மன உறுதி ஒன்று மாத்திரம் போதுமா? போதாது. உனக்கு மனவுறுதி இருப்பதுபோல மற்றவருக்கும் இருக்கும் அல்லவா? நான் இதற்கு முன் ஒரு பெண்ணைப் பார்த்து அவளிடம் காதல் கொண்டிருக்கிறேன். அவளும் என்னிடம் காதல் கொண்டு ஒரே உறுதியாக இருக்கிறாள். நான் அவள் விஷயத்தில் வைத்த உறுதியான பிரியத்தை மாற்றவே முடியாது. தவறி மாற்றினாலும், அவள் நம்மைச் சும்மா விடுவாளா? நீ இப்போது பயமுறுத்தியது போல, அவளும் செய்வாள் அல்லவா? ஆகையால், நான் ஏற்கெனவே ஏற்பட்டுள்ள உறுதியான ஏற்பாட்டுக்கு விரோதமாக இப்போது எப்படி நடந்து கொள்ளுகிறது? உன்னைக் கலியாணம் செய்து கொள்வதாக ஒப்புக்கொண்ட ஒரு புருஷன் வேறு ஸ்திரீயிடம் இப்படி நடந்து கொண்டால், அதைக் கண்டு நீ சகித்திருப்பாயா? அவன் இப்படி நடந்து கொள்ள நீ இடங்கொடுப்பாயா? ஒருநாளும் இடங் கொடுக்க