பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 19 யாவது சந்திக்கும்போது, நீங்கள் என்னிடத்தில் வழக்கம்போல அன்னியோன்னியமாக நடந்துகொள்ள வேண்டுமே அன்றி முகத்தைச் சுளித்தல் முதலிய அருவருப்புச் சின்னங்களைக் காட்டக் கூடாது' என்றான். அதைக்கேட்ட அம்மாளு, அவனது பிரியத்திற்கு இணங்க ஒழுங்காக நடந்து கொள்வதாக உறுதி கூறியபின் அவ்விடத்தை விட்டு வெளிப்பட்டு வெட்கமும், துக்கமும், அழுகையும் பொங்கி எழுந்த பரம சங்கடமான நிலைமையில் தனது விடுதிக்குப் போய்ச் சேர்ந்தாள். அதன்பிறகு இரண்டு நாழிகை சாவகாசம் கழிய, மாலை நேரம் வந்தது. ஊர்சுற்றிப் பார்ப்பதற்காகச் சென்றிருந்த தனம், அபிராமி, முத்துலக மி ஆகிய மூவரும் திரும்பிவந்து சேர்ந்தனர். உடனே அம்மாளு அவர்களைத் தனிமையில் வைத்துக் கொண்டு தனக்கும் கலியாணசுந்தரத்திற்கும் நடந்த வாக்குவாதத்தின் சாராம்சத்தை எடுத்து விரிவாகக் கூற, அந்த விபரீதச் செய்தியைக் கேட்ட பெண்டீர் மூவரும் திடுக்கிட்டு திக் பிரமை கொண்டு வாயைத் திறந்து மறுமொழி சொல்ல மாட் டாத ஊமைகள் போலாயினர். அவர்களது மனதில் அபாரமான தி கிலும் கலக்கமும் குடிகொள்ளலாயின. எதிர்பார்க்காத அந்த மகா விபரீதமான அபாய சமயத்தில் எப்படி நடந்து கொள்ளுகிறது என்ற குழப்பமும் திகைப்பும் கொண்டு தத்தளிக்க லாயினர். முத்துலக்ஷ மி தாங்கள் என்ன தந்திரம் செய்யலாம் என்பதைப் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்து விட்டாள். மற்ற இரண்டு சகோதரிகளும் கையைப் பிசைந்து கொண்டு, 'இந்தச் சங்கடத்திலிருந்து நாம் எப்படித் தப்புகிறது?’ என்று அச்சத்தோடு கூறினர். உடனே அம்மாளு பேசத் தொடங்கி, “நாம் எந்த வழியிலும் போகமுடியாமல் இருக்கிறது. நாம் இவருடைய பேச்சை மீறிப் புறப்பட்டுப் போய்ப் பூனாவில் வேலைக்கமர்ந்தால் இவர் அங்கே வந்து லலிதகுமாரிதேவியினிடத்தில் ரகசியத்தை