பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 229 தாங்கமாட்டாதவனாய்த் தனது பொறுமையை இழந்து தனது முழு பலத்தையும் வெளிப்படுத்தி, அவளது கைகளிரண்டையும் இறுகப்பிடித்து, அவளைத் துர நகர்த்தி விட அவள் மறுபடியும் வேண்டுமென்றே அப்பால் சாய்ந்து, "ஐயோ செத்தேன்' என்று பெருங் கூச்சலிட்ட வளாய்த் தரையில் படேரென்று விழுந்தாள். விழுந்தவள் மறுபடியும் எழுந்திருக்காமலும், அசையாமலும், மூச்சு விடாமலும் அப்படியே கிடந்தாள். - அவ்வாறு அவள் வீழ்ந்ததைப்பற்றி நிரம்பவும் விசனமுற்ற கலியாணசுந்தரம் அவள் பேசாமல் படுத்திருப்பது ஒருவிதமான பாசாங்கு என்று நினைத்துக் கால்நாழிகை நேரம் மெளனமாக இருந்தான். ஆனால், அவள் அப்படி சும்மா இருக்கக் கூடியவளல்ல வென்ற எண்ணம் தோன்றியதாகையால், அவன் மெதுவாக அவளண்டை நெருங்கி, 'இந்திராபாயி: இந்திராபாயீ என்று இருமுறை கூப்பிட்டுப் பார்த்தான். மறுமொழி கிடைக்கவில்லை. உடனே, அவன் மெதுவாக அவள்மீது கையை வைத்துத் தொட்டுப் பார்த்தான். உடம்பு சில் லிட்டு வியர்வை நிறைந்திருந்தது. நாடியும் அடித்துக் கொள்ளவில்லை. அவள் ஒருவேளை இறந்துபோய் விட்டாளோ என்ற திகில்கொண்டு அவன் அவளைப் பிடித்து இரண்டொரு முறை அசைத்தான். உடம்பு பிணம் போல விறைப்பாக இருந்தது. என்ன செய்வான்? அவனது மனம் விவரிக்க முடியாதபடி கலங்கித் தவித்தது. அவன் உடனே விளக்கண்டை ஒடி அதைக் கொளுத்தி எடுத்துக்கொண்டு வந்து, ஒரு குவளையில் தண்ணிரும் கொணர்ந்து வைத்துக்கொண்டு, அவளது முகத்தில் தண்ணிரைத் தடவி, 'இந்திராபாயி! இந்திராபாயி விழித்துக்கொள்; கொஞ்சம் தண்ணீர் குடி. குவளையை இதோ வாயில் வைக்கிறேன்' என்று கூறிய வண்ணம் அவளது முகத்தைத் திருப்பி விளக்கு வெளிச்சத்தில் பார்த்தான். பார்க்கவே அவள் தனம், அம்மாளு ஆகிய