பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 பூர்ணசந்திரோதயம்-3 ஒழுங்காகுமா என்ற கேள்வியும், அந்த அசங்கியமான வரலாறுகள் எல்லாம் தனது அக்காளுக்குத் தெரிந்தால், அவன் நிரம்பவும் சங்கடத்தில் ஆழ்வதன்றி அத்தகைய பொல்லாத மனிதரை மணக்க வேண்டாம் என்று கூறித் தடுத்து விடுவாள் என்ற எண்ணமும் உண்டாயின. ஆகவே, அந்த நிலைமையில் அவரிடம் போய் ப் பேசுவது தன்னைப் போன்ற இளங்கன்னிகைகளுக்குத் தகுந்த ஒழுக்க மாகுமா என்ற நினைவும் தோன்றித் தோன்றி மேலாடியது. அவளது மனதில் அவனது விஷயத்தில் உண்டாகி இருந்த மட்டற்ற காதலும் பிரேமையும் உரமாக வேரூன்றி எளிதில் விலக்கு இயலாவகையில் வலுத்துப்போய் அவளது மனம் முழுதும் அவனது மயமாகவே நிறைந்திருந்தமையால், அவ்வளவு எளிதில் கலியாணசுந்தரத்தின் தொடர்பை விலக்கி விடுவதும் அவனை மறந்துவிடுவதும் அசாத்தியமான காரியமாக இருந்தன. ஆகவே, அவள் என்ன செய்வது என்பதை நிச்சயிக்கமாட்டாமல் தத்தளித்துப் பரிதபித்துத் துயரமே வடிவாகவும், கலக்கமே நிறைவாகவும், குழப்பமே மயமாகவும் மெளனமாய் நிற்க, அதைக் கண்ட அந்த ஸ்திரீ முன்னிலும் பன்மடங்கு அதிக நெகிழ்வாகவும் வாஞ்சையோடும் பேசத் தொடங்கி, 'அம்மா! உன் மனம் என்னவிதமாகத் தவிக்கும் என்பது எனக்குத் தெரியாது. உன்னிடம் இதுவரையில் மகாபரிசுத்தராக நடந்துகொண்ட அந்த மனிதர் திடீரென்று இப்படிப்பட்ட இழிவில் இறங்கியிருப்பாரா என்று உன் மனம் சந்தேகப்படுவதும் சகஜமே. நானோ இதற்கு முன் பழக்கமில்லாத புதிய மனிஷி. என்னுடைய வார்த்தையைக் கொண்டு உனக்கு இதுவரையில் நிரம்பவும் அந்தரங்க சிநேகராக இருந்த ஒருவரைப் பற்றி மகா இழிவான அபிப்பிராயங்கள் கொள்வது எவருக்கும் சாத்தியமான காரியமல் லதான். ஆகையால், நான் சொல்வதெல்லாம் உண்மையென்று நீ உடனே நம்பி விட வேண்டுமென்று நான் எதிர்பார்ப்பது