பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 - பூர்ணசந்திரோதயம்-3 செய்கிறேன். இப்போது நீ இங்கே வந்ததும், என்னோடு பேசிய்தும் கூட எவருக்கும் தெரியக்கூடாது. ஆகையால், உன்னை மறுபடியும் சத்திரத்தில் கொண்டுபோய்விட: செய்கிறேன். நான் மறுபடியும் இந்த அம்மாளை அனுப்புகிற வரையில் நீ அவ்விடத்தில் செளக்கியமாக இருக்கலாம் என்று மனமார்ந்த அன்போடு உருக்கமாகக் கூறினார். அதைக் கேட்ட ஷண்முகவடிவு அப்படியே செய்வதாக ஒப்புக்கொள்ள, அவளைச் சத்திரத்திலிருந்து அழைத்துவந்த ஸ்திரீ மறுபடியும் அவளை வண்டியில் உட்கார வைத்துக் கொணர்ந்து சத்திரத்தில் விட்டு ஜாக்கிரதையாக இருக்கும்படி சொல்லியபின் அவ்விடத்தை விட்டுப் போய்விட்டாள். அவ்வாறு விடப்பட்ட நமது மாணிளம் பேடான ஷண்முகவடிவினது மன நிலைமை எப்படி இருந்தது என்பது விவரித்துச் சொல்வது அசாத்தியமான காரியம். தான் கோலாப்பூருக்கு வந்ததும் அவ்விடத்தில் கேள்வியுற்றவை யுமான விஷயங்கள் எல்லாம் உண்மையில் நடப்பவைகளா, அல்லது அவைகள் தனது கனவில் தோன்றுகின்ற மானnகத் தோற்றங்களா என்ற சந்தேகம் அப்போதும் தோன்றிக் கொண்டிருந்தது. தான் கபடசன்னியாசி யினிடம் அகப்பட்டுத் தனது கற்பையும் உயிரையும் இழந்துவிடக்கூடிய மகா பயங்கரமான அபாய நிலைமையில் இருந்த காலத்தில் ஈசுவரன் போலத்தோன்றித்தன்னைக் காப்பாற்றி அதன்பிற்கும் எவ்விதக் கைம்மாறும் கருதாமல் தன் விஷயத்தில் அளவற்ற இரக்கமும் பச்சாதாபமும் காண்பித்துப் பலவகையில் தனக்கு உதவி செய்து தன்னிடத்தில் வார்த்தையிலாவது செய்கை யிலாவது ஒர் இம் மியளவும் அவமரியாதையாகவாவது, தவறாகவாவது நடந்து கொள்ளாமல் இருந்த உத்தம புருஷரும், அதுபோலவே, சிவபாக்கியம் என்னும் அநாதைப் பெண்ணின் விஷயத்திலும் அளவற்ற இரக்கமும், அநுதாபமும் காட்டி எவ்விதப் பிரதிப் பிரயோசனத்தையும் எதிர்பாராமல் அவளைக்