பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார் 289 உன்னைப் புகழுகிறது. அதுவுமின்றி, இப்போது நீ இளவரசர் முதல் மற்ற எல்லாரையும் விட என்னையே சிரேஷ்டமாக மதித்து இந்தச்சங்கதியை எனக்குத் தெரிவித்திருக்கிறாய். இந்த இணையற்ற உதவிக்கு நான் என்னுடைய ஆஸ்திகள் சகலத்தையும் உனக்குச் சன்மானம் செய்தாலும் அது போதாது. இப்போது எனக்குச் சொல்லியனுப்பிய ஒரு மதிப்பு இருக்கிறதல்லவா அதற்காக நான் உனக்கு இப்போது முதலில் ஒரு சன்மானம் செய்கிறேன். மற்ற காரியம் பலித்தபிறகு, இதைவிடப் பத்துப் பங்கு அதிகமான சன்மானம் செய்வேன் என்பதை நீ நிச்சயமாக நம்பலாம்' என்று கூறியவண்ணம், தமக்கெதிரில் இருந்த மேஜையைத் திறந்து, அதற்குள் ஆயத்தமாக வைக்கப்பட்டிருந்த வைர ஹாரத்தை வெளியில் எடுத்தார். அதுகோடி சூரியப் பிரகாசம் போல ஜிலுஜிலு வென்று ஜ்வலித்தது. அதைக் கண்ட அம் மணிபாயி, "என்ன இது! இதை யாருக்குச் சன்மானம் செய்யப்போகிறீர்கள் எனக்கா அந்தப் பெண்ணுக்கா? இது ஒரு சுமார் பத்து லட்சம் ரூபாய் பெறும்போல இருக்கிறதே! இது எனக்கு வேண்டாம். நான் முன்னால் காரியத்தை முடிக்கிறேன். அதன்பிறகு மற்ற சங்கதிகளையெல்லாம் பார்த்துக்கொள்வோம்" என்றாள். அதைக்கேட்ட ஜெமீந்தார், 'நன்றாகச் சொல்லுகிறாய். இது அந்தப் பெண்ணுக்கல்ல; உனக்கே இன்னம் பின்னால் உனக்கு இதைப் போல பத்துப் பங்கு அதிக சன்மானம் செய்வேன் என்பதை நீ நிச்சயமாக நம்பலாம். அந்தப் பெண்ணுக்கு நான் வைரஹாரம் ஒன்றுதானா கொடுப்பேன். கோடிக்கணக்கிலுள்ள என்னுடைய பொக்கிஷத்தை எல்லாம் திறந்துவிட்டு எல்லாவற்றையும் அவளுடைய வசத்திலேயே ஒப்புவித்து விடுகிறேன். அதைப்பற்றி நீயாவது அந்தப் பெண்ணாவது கொஞ்சமும் யோசனை செய்ய வேண்டியதே இல்லை. இதை நீ முதலில் வாங்கிக்கொள்; பரவாயில்லை' என்று அன்பாக