பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 . பூர்ணசந்திரோதயம்-3 எடுத்து மேல் விலாசத்தைப் பார்க்க, அது ஒரு பெண் பிள்ளையினால் அழகாகவும் முத்து முத்தாகவும் எழுதப் பட்டிருந்ததையும், அதன்மேல் விலாசத்தில் தனது பெயரே இருந்ததையும் அவள் உணர்ந்தாள். அன்னத்தம் மாளினது புத்திரிகள் மூவருள் எவளோ ஒருத்தியே அந்தக் கடிதத்தை எழுதி அங்கே வைத் திருக்க வேண்டுமென்ற நிச்சயம் அவனது மனதில் உண்டானது. ஆகையால், அதைப் பிரிக்காமல் எறிந்துவிடலாமா என்ற எண்ணம் தோற்றியது. ஒருவேளை அம்மாளு தனது முடிவை அப்போது வெளியிட்டிருப்பாளோஎன்ற சம்சயம் தோன்றியது. ஆகையால் அவன் அந்தக் கடிதத்தை எடுத்துப் பிரித்துப் படிக்க, அது அடியில் வருமாறு எழுதப்பட்டிருந்தது: கனம் ஐயா அவர்களுக்கு தனம் நிரம்பவும் வணக்கமாகச் செய்து கொள்ளும் விக்ஞாபனம். நானும் என் அக்காளான அம்மாளுவும் கூடிய சீக்கிரத்தில் உங்களோடு சில விஷயத்தைப் பற்றித் தனியாகப் பேச வேண்டுவது அத்தியாவசியமாக இருக்கிறது. எங்களுடைய தாயாரும், மற்றும் சிலரும் சதியாலோசனை செய்து எங்களை வற்புறுத்தி இப்படிப்பட்ட பரம சங்கடமான நிலைமையில் வைத்துவிட்டதைப் பற்றி என் மனம் படும்பாடு இவ்வளவு அவ்வளவு அல்ல. இப்படிப்பட்ட அபாயகரமான நிலைமையி லிருந்து நீங்கள் எவ்வித சுயநலமும் கருதாமலும், பரோபகாரச் சிந்தையோடும் என் அக்காளுக்குச் சொல்லிய புத்திமதியின்படி நடந்துகொள்ள வேண்டுமென்று நான் அநேகமாய் முடிவு செய்து விட்டேன். இளவரசியான லலிதகுமாரி தேவியினிடம் பனிப்பெண்ணாக இருக்கும்வேலை எனக்கு வேண்டாமென்று எழுதிவிட நான் தீர்மானித்து விட்டேன். அம்மாளுவும் அப்படியே செய்யப் போகிறாள். ஆனால், எங்களுடைய மூன்றாவது சகோதரியான அபிராமி மாத்திரம் அதற்கு இணங்கிவரவில்லை. எங்கள் சின்னம்மாளோ நாங்கள் அப்படிச்