பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 31ア உடம்பையும் முற்றிலும் சோர்விலும் துயரத்திலும் ஆழ்த்திக் கொண்டிருந்தது. ஆனாலும் தன்னிடத்திலும் தனது அக்காளி டத்திலும் மட்டற்ற அன்பும் பட்சமும் வைத்துள்ள அந்தப் பேருபகாரிகளின் முன்னர்தான் தனது சொந்த வியாகுலங்களை எல்லாம் அதிகமாகப் பாராட்டி அவர்களுடைய மனதையும் சஞ்சலத்தில் ஆழ்த்தக் கூடாது என்று நினைத்த ஷண்முகவடிவு தன் மனதை அடக்கிக்கொண்டு உணவு விஷயத்திலும் சயன விஷயத்திலும் அவர்களது மனம் கோணாதபடி நடந்து கொள்ள வேண்டியிருந்தது. ஆகவே, அவள் தன் மனப்போக்குக்கு முற்றிலும் விரோதமாக அவர்களால் வழங்கப்பட்ட இனிய பொருட்களை உண்டு பஞ்சணையில் சயனித்துக் கொண்டாள். மறுநாள் காலையில் ஜெமீந்தார்.தமது காலைக் கடமைகளை நிறைவேற்றிக் கொண்டபின் லீலாவதியை அழைத்து, சகல விஷயத்திலும் ஷண்முகவடிவு சிறிதும் குறைவின்றி செளக்கியமாக இருக்கும் படி ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு, தான் மாரியம்மான் கோவிலுக்குப் போவதாகவும் கூடுமானால் கமலத்தைத் தம்முடன் கூடவே அழைத்து வந்துவிடுவதாகவும் கூறிவிட்டு ஒரு பெட்டி வண்டியில் உட்கார்ந்துகொண்டு வெளியில் போய்விட்டார். அவ்வாறு போவதற்கு முன்னர், அவர் ஷண்முகவடிவிற்குத் தெரியாமல் லீலாவதியைத் தனிமையில் அழைத்து, அன்றைய தினம் தாம் திரும்பி வருவதற்குள் அவள் ஷண்முகவடிவின் மனதை மாற்றி வைக்க வேண்டும் என்றும், அன்றையதினம் இரவிற்குள் தாம் எப்படியும் அவளைத் தமது மனைவியாக்கிக் கொள்ள வேண்டும் என்றும், அவள் தானாகவே கனியாத பட்சத்தில், கமலம் வந்திருப்பதாகச் சொல்லி லீலாவதி அவளை ரதிகேளி விலாசத்திற்குள் அனுப்பிவிட வேண்டும் என்றும், தாம் அதற்கு முன்னாகவே அவ்விடத்தில் இருப்பது என்றும், அவள் வந்தவுடன் அவளைப் பலாத்காரப் படுத்துவது என்றும் சொல்லி முடிவு செய்துகொண்டு மாளிகையை விட்டுப் போய்விட்டார்.