பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 பூர்ணசந்திரோதயம்-3 பிரஸ்தாபம் செய்வது கொஞ்சமும் ஒழுங்கேயல்ல. நீ கடைசியாக ஏதோ பிரமாணம் செய்ய ஆரம்பித்தாயே. அப்படிப்பட்ட பிரமாணம் எதையும் நான் கேட்கவே இல்லை. நீ இந்தப் பைத்தியத்தை விட்டுவிடு. உன்னுடைய கடிதத்தில் எழுதப்பட்டுள்ள விஷயங்கள் நிஜமாக இருக்கும் என்று நினைத்தல்லவா நான் இங்கே வந்தேன். நீ நடந்து கொள்ளும் மாதிரியைப் பார்த்தால் என்னை இவ்விடத்துக்கு வரவழைப்பதற்காக நீ பொய்க் கடிதம் எழுதித் தந்திரம் செய்திருக்கிறாய் என்றே எண்ண வேண்டியிருக்கிறது. அதுவுமன்றி, அம்மாளு தூங்கிக் கொண்டிருக்கிறாள் என்று நீ சொன்னதையும் என் மனம் நம்பமாட்டேன் என்கிறது. நான் சுத்த அன்னியன் என்பதை உணர்ந்தும், நீ என்னிடம் இப்படி நடந்துகொள்வதைக் காண, என் அங்கமெல்லாம் அப்படியே குன்றிப் போகிறதே என்று உருக்கமாகவும் உறுதியாகவும் கூறினான். அவனது சொற்களைக் கேட்ட தனம் வெறிகொண்டவள் போல மாறி புத்திமாறாட்டம், மயக்கம், ஆவேசம் முதலிய சின்னங்களைக் காட்டி கட்டிலடங்கா உருக்கமும் வாஞ்சையும் ததும்பிய முகத்தினளாய் மெதுவாக அவனிடம் நெருங்கித்தனது வலக்கரத்தை நீட்டி அவனது மோவாயின் கீழே கொடுத்து நயமாகக் கெஞ்சிக் கொஞ்சி, "ஐயோ! நீங்களா அன்னியர்! ஒரு நாளும் இல்லை. என்னுடைய ஜீவகாலம் முழுதும் நான்உங்களோடு பழகினால், உங்களை நான் எவ்வளவு நன்றாக அறிந்து கொள்வேனோ, அவ்வளவு நன்றாக உங்களை நான் அறிந்து கொண்டிருக்கிறேனே! உங்களுடைய வடிவழகும், குணத்தழகும் முகத் தோற்றத்திலேயே அபாரமாக ஜ்வலித்துக் கண்டோர் மனதை காந்தம்போல ஒரு நொடியில் கவர்ந்து மதிமயங்கச் செய்யும் வல்லமை வாய்ந்திருக்கின்றன. அப்படி இருக்க, இந்த இரண்டு நாட்களில் நான் உங்களை அறிந்து கொள்ளவில்லை என்று சொல்லத்