பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 39 அடைந்து விடுவேன். என்னுடைய மனசைக் கொள்ளை கொண்டு என்னை மரண அவஸ்தையில் ஆழ்த்திய நீங்கள் இந்த அற்ப உதவியையாவது செய்து, என் உயிரைக் காப்பாற்றக் கூடாதா? என் வேதனையை எல்லாம் இன்னும் விரிவாக எடுத்துச் சொல்ல நினைத்தால், வெட்கத்தினால் என் உச்சிமுதல் உள்ளங்கால் வரையில் குன்றிப்போகிறது. இருந்தாலும் நான் என்னுடைய மனசின் உண்மையான நிலைமையை வெளியிட்டுச் சொல் லியே தீரவேண்டி யிருக்கிறது. எனக்குப் பதினெட்டு வயதாகிறது. இதுவரையில் எத்தனையோ யெளவனப் புருஷர்கள் என் திருஷ்டியில் பட்டிருக்கிறார்கள். அப்படி இருந்தும் என் மனசில் இது வரையில் இப்படிப்பட்ட சகிக்க முடியாத விகாரம் ஏற்பட்டதையே நான் அறியேன். உங்களைப் பார்த்த கடினமே, என் மனசை ஏதோ ஒரு பெருத்த சக்தி இழுத்துப் பிடித்துக் கொண்டு என் நினைவு முழுவதையும் உங்கள்மேலே லயிக்கச் செய்திருக்கிறது; என் உடம்பு முழுதும் ஒருவித அக் கினி ஜ்வாலையில் பட்டுக் கருகி வாடித்துவள்கிறது. நான் பிறந்தது முதல் இப்படிப்பட்ட விநோதமான நோயை அனுபவித்தே அறியேன். இந்த உலகத்தில் இதுவரையில் பிறந்த எந்தப் பெண்ணும் இதுபோன்ற நூதன வியாதியை அனுபவித்தே இருக்கமாட்டாள் என்று நான் துணிந்து சொல்லுவேன். இந்த மகா கொடுரமான நோய் நொடிக்குநொடி என் உயிரைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குடித்துக்கொண்டே போகிறது. எப்போதும் உங்களுடன் கூடவே இருந்து, உங்கள் அழகைப் பார்த்துக் கொண்டிருப்பதை தவிர, வேறு ஆகாரத்திலாவது தூக்கத்திலாவது என் மனம் செல்லமாட்டேன் என்கிறது. நீங்கள் என் கண்ணில் படாத நேரத்தில் இந்த உலகமே பாழடைந்து தோன்றுகிறது. ஆகையால்,நீங்கள் எப்படியாவது மனது இரங்கி இந்த ஏழையின் மேல் கருணை புரிந்து ஒரே ஒருநாள், அல்லது ஒரே ஒரு நாழிகை நேரம் என்னைத் தங்களுக்குரிய காதலியாக ஏற்றுக்கொண்டால், அதுவே என் ஆயிசுக்குப்