பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 பூர்ணசந்திரோதயம்-3 போதுமானது. அந்த இன்பகரமான நினைவையே நான் என் உயிர்த்தாரமாக வைத்துக்கொண்டு எப்போதும் ஆனந்தமடைந்து பிழைத்துப்போகிறேன். ஆனால், நீங்கள் ஒரே பிடிவாதமாக என்னுடைய வேண்டுகோளை மறுத்து என்னைப் புறக்கணித்து விலக்கினால், அதன்பிறகு நான் இந்த உலகத்தில் இருப்பதற்கே முடியாது. இதோ பக்கத்தில் ஒரு பெருத்த திருக்குளம் இருக்கிறது. அது இரண்டு பனைமர ஆழம் இருக்கிறது என்று இந்த ஊரிலுள்ள ஜனங்கள் சொல்லிக் கொள்ளுகிறார்கள். அந்த ஆழம் என்னுடைய உயிரை வாங்குவதற்கு எதேஷ்டமானது' என்று கட்டிலடங்கா ஆவேசத்தோடும் கலவரமான தோற்றத்தோடும் கூறினாள். அவளது அதிமூர்க்கமான அலட்டலைப் பார்த்துக் கொடுரமான வார்த்தைகளைக் கேட்ட நமது யெளவன வீரனான கலியாணசுந்தரம் கதிகலங்கிக் கலகலத்துப் போய் நிரம் பவும் உருக்கமாக அவளைப் பார்த்து நயமாகவும் அன்பாகவும் பேசத் தொடங்கி, 'தனம் என்ன பைத்தியம் இது போதும், இவ்வளவோடு நிறுத்து. முதலில் நீ எழுந்திரு. யாராவது பார்க்கப் போகிறார்கள். நாம் இங்கே வந்து அதிக நேரம் ஆகிவிட்டது. நீயும் வேண்டிய வரையில் பேசிவிட்டாய். நாம் இனி ஒரு நிமிஷம் கூட இங்கே இருப்பது சரியல்ல. வா! நம்முடைய ஜாகைக்குப் போகலாம்' என்றான். அவனது சொற்களைக் கேட்டதனம் ஏமாற்றமும் விரக்தியும் அடைந்தவள்போல அத்தியந்த விசனக்குறிகள் தோற்றுவித்த முகத்தினளாய் அவனை நோக்கி, "சரி; நான் இவ்வளவு தூரம் கெஞ்சி மன்றாடியும் உங்களுடைய மனம் இரங்கவில்லை. இவ்வளவுதான் நான் கொடுத்து வைத்தது. இனி நான் இந்த உலகில் இருப்பதில் எவ்விதச் சுகமும் இல்லை. நீங்கள் போய்விட்டு வாருங்கள். நானும் ஒரே முடிவாக இந்த உலகை விட்டே போய் விடுகிறேன். நான் இந்தத் திருக்குளத்தில் விழுந்து இறந்துபோய் விட்டேன் என்று தயை செய்து