பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 41 என்னுடைய சகோதரிகளிடம் சொல்லிவிடுங்கள். அதுதான் நான் கடைசியாகத் தங்களுக்குக் கொடுக்கும் பிரயாசை என்று கூறிய வண்ணம் சடக் கென்று எழுந்து மான்குட்டி துள்ளிக் குதித்து ஒடுவதைப் போல ஒட்டமாக ஓடி, பக்கத்தில் இருந்த திருக்குளத்திற்கு அருகில் போய் விட்டாள். அவளது விபரீதச் செய்கையைக் கண்டு பிரமித்து என்ன செய்வது என்பதை அறியாது சிறிது நேரம் அப்படியே ஸ்தம்பித்து நின்ற கலியாணசுந்தரம், 'ஓகோ இவள் நிஜமாகவே குளத்தில் விழுந்து விடுவாள் போல் இருக்கிறதே! ஒருவேளை பொய்யாக நடித்து என்னைப் பயமுறுத்துகிறாள் என்றல்லவா நினைத்தேன். அதோ படிகளில் இறங்குகிறாளே! 'சே! இனி நான் சும்மா இருப்பது சரியல்ல" என்று தனக்குள் யோசனை செய்தவனாய் அவ்விடத்தை விட்டு ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து ஐந்து நிமிஷ நேரத்தில் அவள் இருந்த இடத்திற்குப்போய்ச் சேர்ந்து, 'நில்லு; நில்லு; என்ன காரியம் செய்யத் துணிந்தாய்!” என்று அன்பாக அதட்டிய வண்ணம் அவளது இடுப்பைப் பிடித்து பின்னால் இழுக்க, அவள் முற்றிலும் களைத்து மூர்ச்சித்து மெய்மறந்து போய் வேரற்ற மரம் போல அவனது மார்பில் சாய்ந்து விட்டாள். அவளது உடம்பைத் தொடுவது அவனுக்கு முற்றிலும் அருவருப்பாக இருந்ததானாலும், அந்த நிலைமையில் அவளைக் கீழே விடுத்தால், அவள் படிகளில் உருண்டு தண்ணீரில் வீழ்ந்து விடுவாள் என்ற எண்ணம் உண்டானது. ஆகையால், அவளைத் துக்கிக் கொண்டபடி படிகளின் மேல் ஏறிப் பக்கத்திலிருந்த ஒரு மரத்தின் அடியில் பதிக்கப்பட்டிருந்த சலவைக்கல் மேடை ஒன்றின்மேல் படுக்கவைத்தான். அவளது கண்கள் மூடப்பட்டிருந்தன. உடம்பும் கைகளும் கால்களும் துவண்டு செயலற்றுக் கிடந்தன. முகம் வெளிறடைந்து அவளது மன வேதனையை நன்றாக வெளிப்படுத்தியது. அந்த மகா சங்கடமான நிலைமையில் தான் என்ன செய்வது என்பதை உணராமல், தத்தளித்து நிரம்பவும் சஞ்சலம் அடைந்தவனாய்