பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 4了 அவனிடத்தில் தான் மறுபடியும் வாக்குவாதம் செய்து கொண்டிருப்பது சரியல்ல என்று நினைத்த தனம் என்னும் மடந்தை வெட்கமும், துக்கமும், அழுகையும் பொங்கியெழுந்த நிலைமையில் அவ்விடத்தை விட்டுக் குனிந்தபடி நடந்து பக்கத்திலிருந்த சத்திரத்தை அடைந்து, அதற்குள் நுழைந்து தங்களது விடுதியை அடைந்தாள். அவ்வாறு அவள் சத்திரத்திற்குள் போய் மறைந்த வரையில் தெருவில் நின்று கொண்டிருந்த கலியாணசுந்தரம், உடனே அவ்விடத்தை விட்டு, சத்திரத்தை நோக்கி நடந்து அதன் வாசற் படிக்கு வந்துசேர்ந்தான். அப்போது உட்புறத்திலிருந்து வெளிப்பட்ட ஒரு போலீஸ் உத்தியோகஸ்தன் நமது கலியாணசுந்தரத்தைப் பார்த்து வணங்கி, 'ஐயா! நீங்கள் இந்தச் சத்திரத்தில் இறங்கி இருப்பவர்களா?' என்றான். கலியாணசுந்தரம், 'ஆம் ' என்றான். உடனே போலீஸ் அதிகாரி, 'அப்படியானால், உங்களைக் கேட்டால் சங்கதி தெரியும். தஞ்சாவூரிலிருந்து கலியாணசுந்தரம் என்று பெயர் கொண்ட ஒருவர் இங்கே வந்திறங்கி இருக்கிறாரே; அவர் யாரென்பது உங்களுக்குத் தெரியுமா?’ என்றான். அந்த வார்த்தையைக் கேட்ட கலியாணம் திடுக்கிட்டு மிகுந்த வியப்பும் கலக்கமும் அடைந்து யாரோ போலீஸ் உத்தியோ கஸ்தர்களைப் போலத்தோன்றும் அந்த மனிதன் தன் பெயரைச் சொல்லி தன்னைத் தேட வேண்டிய காரணம் என்னவாக இருக்கலாம் என்ற சிந்தனையும் கவலையும் கொண்ட வனாய், 'ஏன் அவரைத் தேடுகிறீர்? என்பெயர்தான் கலியான சுந்தரம்; நான்தான் தஞ்சாவூரிலிருந்து வந்து இருக்கிறவன் என்று மறுமொழி கூறினான். உடனே அந்தப் போலீஸ் அதிகாரி, 'ஐயா அப்படியானால், நீங்கள் தயை செய்து கொஞ்சதூரம் என்னோடு கூட வரவேண்டும். இந்த நகரத்தின் போலீஸ் தலைவரான கமிஷனர் உங்களோடு ஏதோ சில அவசர சங்கதியைப் பற்றிப் பேசவேண்டும் என்று விரும்பி என்னை go.3.III-4