பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25-வது அதிகாரம் புதிய மோகனாஸ்திரம் - மூடுமந்திரம் இவ்வாறு நமது யெளவன வீரனான கலியாணசுந்தரம், தனது உண்மைப் பெயரை மாற்றி வைத்துக்கொண்டு வந்த காரணம் பற்றி ஒற்றன் என்று சம்சயிக்கப்பட்டு, கோலாப்பூர் போலீஸ் கமிஷனரால், அவரது கச்சேரியிலிருந்த ரகசியமான விடுதியில் அடைபட்ட பிறகு ஒருமாத காலம் கழிந்தது. அவன் அடைபட்டிருந்த இடம் நிரம்பவும் நெருக்கமான ஒரு சிறிய அறை. அதன் ஒரு மூலையில் ஒரு விசிப்பலகையில் அவனது படுக்கைவிரிக்கப்பட்டிருந்தது. இன்னொரு பக்கத்தில் அவன் குளிப்பதற்காக ஒரு கஜ சதுரமுள்ள ஒரு சிறிய முற்றமும், துவாரமும் இருந்தன. அவனுக்குத் தேவையான ஜலம் நிரப்பி வைப்பதற்கு ஒரு பெருத்த மண்பானையும், இரண்டு தகரக் குவளைகளும் இருந்தன. இவைகளே அந்த அறையில் காணப்பட்ட பொருட்கள். இரும்புக் கம்பிகளால் அடைபட்டிருந்த இரண்டு ஜன்னல்கள் சுவரில் காணப்பட்டன. அந்த ஜன்னல்கள் அந்தக் கட்டிடத்தின் உட்புறத்தில் இருண்டிருந்த ஒரு முற்றத்தைப் பார்த்தபடி அமைக்கப்பட்டி ருந்தன. அந்த ஜன்னல்களின் வழியாக முற்றத்துப் பக்கத்தைப் பார்த்தால், அதைச் சுற்றிலும் சுவர்களே தெரிந்தனவன்றி வேறெதுவும் காணப்படவில்லை. ஆகையால், அந்தப் பக்கமாக தப்பிப்போவது கூடாத காரியமாக இருந்தது. அந்த அறையின் கதவு அழுத்தமும் கனமும் ஆனதாக இருந்தது அன்றி, அதன் முழுதும் இரும் பாணிகள் நிரம்பியதாகவும் இருந்தது. அந்தக் கதவைப் பாராக்காரர்கள் மூடும்போதும் திறக்கும் போதும் உண்டான ஓசை நிரம்பவும் பயங்கரமாக இருந்தது. ஆகையால், அது சிறைச்சாலையாக இருக்க முற்றிலும் பொருத்தம் உடையதாகக் காணப்பட்டது. அவ்வாறு