பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 பூர்ணசந்திரோதயம்-3 ஆகையால், அவனது எண்ணம் ஆகாரத்திலாவது தண்ணிரி லாவது செல்லவில்லை. உள்ளே வந்த ஜவான் தோற்றத்தில் அவ்வளவு கொடுமையான மனிதனாகக் காணப்படா விட்டாலும், நிரம்பவும் கண்டிப்பாகத் தனது கடமைகளைச் செய்யும் குணமும் உடையவன் என்பது, அவனது அழுத்தமான மெளனத்திலிருந்து நன்றாக விளங்கியது. தான் சிறைப்படுத்தப் பட்டதன் ரகசியக் காரணம் இன்னது என்பது அந்த சிப்பந்திக்குத் தெரிந்திருக்கவே நியாயம் இல்லை என்றும், ஒருவேளை தெரிந்திருந்தாலும், அவன் அதை வெளியிட மாட்டான் என்றும் கலியாணசுந்தரம் எண்ணிக் கொண்டான். ஆதலால், அவனிடம் அதைப் பற்றிப் பேச விரும்பவில்லை. ஆனால், அந்த ஜவான் வெளியில் போகு முன் கலியாணசுந்தரத்தினிடம் நெருங்கி மரியாதையாகப் பேசத் தொடங்கி, "ஐயா! தினம் மூன்றுவேளை உங்களுக்கு ஆகாரம் கொணர்ந்து கொடுக்கும் படியாகவும், அந்தச் சமயத்தில் உங்களுக்குத் தேவையான சட்டவிரோதமில்லாத இதர செளகரியங்களைச் செய்து கொடுக்கும் படியாகவும் எனக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறார்கள். புஸ்தகங்களோ, எழுது கருவிகளோ உங்களுக்குத் தேவையானால், சொல்லுங்கள். அவைகளை நான் உடனே கொண்டுவந்து கொடுக்கத் தடையில்லை' என்றான். - அதைக் கேட்ட உடனே கலியாணசுந்தரம் சிறிதளவு மகிழ்ச்சி அடைந்தான். சிறைவாசத்திலும் தனக்கு அவ்வள வாவது மரியாதையும், செளகரியமும் கிடைக்கின்றனவே என்ற ஆறுதலும் உண்டாயிற்று. அவன் தனக்குச் சில புஸ்தகங்களும் எழுது கருவிகளும் கொண்டுவரும்படி அந்த ஜவானிடம் கேட்டுக்கொள்ள, அவன் உடனே வெளியில் சென்று மறுபடியும் திரும்பிவந்து ஒருகட்டு புஸ்தகங்களையும் எழுது கருவிகளையும் கொணர்ந்து அவனது விசிப் பலகையின் மீது வைத்துவிட்டு, "ஐயா! நீங்கள் எவ்வளவு வேண்டு