பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 59 திடத்தினாலும், பெருந்தன்மையான குணத்தினாலும், வேதாந்தப் போக்கான நினைவினாலும், ஒருவாறு சகித்துக் கொண்டிருந்தான். ஆனாலும், ஒவ்வொரு சமயத்தில், அவன் தனது உயிருக்குயிரான ஷண்முகவடிவை நினைத்த காலத்தில் அவனது மனத்தில் பொங்கி எழுந்த துக்கமானது அவனால் தாங்கக் கூடிய வரம்பை மீறியதாகப் போய் விடும். இன்ன காரணத்தினால், தான் கடிதம் எழுதவில்லை என்பதையும், இன்ன இடையூறினால் அவ்வளவு காலமாகியும் ஊருக்குத் திரும்பி வரவில்லை என்பதையும் அறிந்துகொள்ள மாட்டாமல், ஷண்முகவடிவு எவ்வாறு தவிக்கிறாளோ என்றும், அவள் தன்னைப் பற்றி ஏதாவது கெடுதலான எண்ணங்கொண்டு விடுவாளோ என்றும், கலியாணசுந்தரம் அடிக்கடி நினைத்து நினைத்து நைந்து உருகி விசனமே வடிவாக உட்கார்ந்திருப்பான். அவளது விஷயத்தில் தான் செய்துகொடுத்த வாக்குறுதியைத் தான் மீறிவிட்டதாக அவள் ஒருகால் நினைத்துக் கொள்வாளோ, அல்லது தனக்கு வழியில் ஏதேனும் பெருத்த அபாயம் நேர்ந்து விட்டதென்று நினைத்து வருந்தி அழுவாளோ என்றும் அவன் சந்தேகித்துக் கலங்கிக் கண்ணிர் விடுப்பான். அந்த ஊரிலிருந்த ராஜாசத்திரத்திற்குத்தன் பேருக்கு ஏதாவது கடிதம் வந்தால், அதை வாங்கித் தன்னிடம் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்று அவன் போலீஸ் கமிஷனருக்குப் பல தடவைகளில் எழுதிக் கேட்டுக்கொண்டான். ஆனால், கமிஷனர் அவைகளுக்கு எழுத்து மூலமான உத்தரவு எதையும் பிறப்பிக்க வில்லை. ஆனால், அவனுக்காக நியமிக்கப்பட்டிருந்த ஜவான் திரும்பிவந்து, அவனுக்கு ஒரு கடிதங்கூட சத்திரத்து விலாசத்துக்கு வரவில்லை என்று வாய்மொழியாகச் சொல்லுவான். அவன் சொன்னது பொய்யென்று கலியாண சுந்தரம் நிச்சயப்படுத்திக் கொண்டான். நான்கு நாட்களுக்கு ஒரு தரம் தவறாமல் கடிதம் அனுப்பிக்கொண்டிருப்பதாக,