பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 63. இன்பசாகரத்தில் ஆழ்த்திக் கொண்டிருந்தது. உன்னதமான புஷ்ப ஜாதிகளின் இனிய வாசனையும், அத்தர், கலவை, கஸ்தூரி முதலியவற்றின் நறுமணமும் ஒன்றுகூடியதைவிட ஆயிர மடங்கு விசேஷமான தெய்வீக மணம் நிறைந்த மந்தமாருதம் அந்த இடம் முழுதும் நிரம்பி அவனை ஆனந்தமாகத் தாலாட்டிக் கொண்டிருந்தது. அரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை முதலிய எண்ணிறந்த தெய்வ தாசிகளும் கந்தருவப் பெண்பாவையரும் அவனுக்கு முன்னர் தோன்றி மாதுரியமாக தெய்வகீதம் பாடி நடனம் செய்தனர். சிலர் வீணை, புல்லாங்குழல் முதலிய வாத்தியங்களை ரமணியமாக முழக்கினர். சிலர் புஷ் பங்களைச் சொரிந்து அவனை வாழ்த்தினர். வேறு சிலர் ஆர்த்தியெடுத்து அவனுக்குத் திருஷ்டி தோஷம் கழித்தனர். மற்றும் சிலர் அவனை நோக்கி இனிமையாகப் புன்னகை செய்து, "பயப்படாதே! உனக்கு ஒரு கெடுதலும் உண்டாகாது' என்று கூறி அவனைத் தைரியப் படுத்தினர். அப்படிப்பட்ட பரம இன்பகரமான கனவில் ஆழ்ந்துஆனந்த பரவசம் அடைந்து கிடந்த நமது கலியான சுந்தரத்தின் கனவு சிறுகச் சிறுக விலகியது. அவனது நித்திரையும் கலைய ஆரம்பிக்கவே, அவன் படிப்படியாகத் தனது உணர்வைப் பெற்றுக் கடைசியில் நன்றாக விழித்துக் கொண்டான். உடனே அவனுக்குத் தனது உண்மையான நிலைமை இன்னது என்பதும் தான் அதுவரையில் கண்டது கனவு என்பதும் விளங்கின. அந்த அபூர்வமான சொப்பனத்தின் இன்பம் அவனது மனதில் அப்போதும் இருந்தது. ஈசுவரனே அந்தக் கனவின் மூலமாகத் தன்னை சந்தோஷிப்பித்து இருக்கிறார் என்றும், தனக்கு வெகு சீக்கிரம் நல்லகாலம் பிறக்குமென்றும், அவன் எண்ணிக் கொண்டு ஈசுவரனை நினைத்துத் தியானம் செய்த வண்ணம் நிம் மதியாகப் படுத்திருந்தான். அப்போது எங்கும் நிசப்தமே குடி கொண்டிருந்தது. அப்போது தான் படுத்தி ருந்த விசிப் பலகைக்குப் பக்கத்திலிருந்த சுவரின்