பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 பூர்ணசந்திரோதயம்-3 லீலாவதி நிரம் பவும் விசனத்தோடு பேசத் தொடங் இ, 'நீங்களும் அவரோடு கொண்டுவரப்பட்டீர்கள் என்பதும், - கொள்ளை அடிக்கப்பட்டீர்கள் என்பதும் எனக்கு அன்றைய தினம் இரவில் அறிவிக்கப்படவில்லை. மறுநாட் காலையிலே தான் என் புருஷர் அந்த விஷயத்தை என்னிடம் வெளியிட்டு அதைப் பற்றி நிரம்பவும் சந்தோஷப்பட்டுக் கொண்டார். அந்தச் செய்தியைக் கேட்டவுடனே, என் மனம் பட்டபாட்டை இவ்வளவு அவ்வளவென்று சொல்ல முடியாது. நீங்களும் இளவரசரோடு வந்திருப்பதாகத் திருடர் சொல்லக்கேட்டு, என் புருஷர் உங்களிடத்திலுள்ள பொருள்களை எல்லாம் அபகரித்துக் கொள்ளும் படி உத்தரவு செய்தாராம். அதைக் கேட்டபோது, என் மனமும் உடம்பும் பதறிப் போயின என்று நிரம்பவும் உருக்கமாகக் கூறினாள். ஜெமீந்தார், "ஆகா! உனக்கு எப்பேர்ப்பட்ட மேலான குணமுடைய புருஷன் வந்து வாய்த்தான் பார்த்தாயா? அன்றையதினம் காரியம் அப்படி நடந்த காலத்தில், எல்லாவற்றிற்கும் மூலாதாரமானவன் உன் புருஷன்தான் என்பதை நான் சொப்பனத்திலும் நினைக்கவே இல்லை. அதுவுமன்றி, அப்படிப் பார்சீ ஜாதி ஸ்திரீயாக நீதான் வந்திருப்பாய் என்று நான் சந்தேகப்படக் கொஞ்சமும் ஏதுவே இல்லை. அதிருக்கட்டும். அதன்பிறகு புதன்கிழமையன்று தினசரி டைரிப் புஸ்தகத்தைக் கொண்டுவந்து வைத்ததும் நீ தானே?' என்றார். லீலாவதி, 'ஆம். நான்தான். என்னைத்தவிர வேறே யார் வந்து அதை உங்களிடம் கொடுத்தாலும், நீங்கள் அவனைத் தொட்ர்ந்து வரும்படி ஆளை அனுப்பி உண்மையைக் கண்டுபிடித்து விடுவீர்கள் என்ற எண்ணத்தினால் என் புருஷர் என்னையே அனுப்பினார். நான் அந்தக் காரியத்தைச் செய்ய என்னால் ஆகாது என்று எவ்வளவோ சொல்லிப் பிடிவாதம் செய்தும், அழுதும் பார்த்தேன். அவர் என்னைவிடவே இல்லை.