பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 99 இருக்கிறோம் ‘ என்று நிரம் பவும் ஏளனமாகவும் மமதை யாகவும் கூறினார்.

அந்த வார்த்தைகளைக் கேட்ட கலியாணசுந்தரத்தின் உடம்பு தானாகவே கிடுகிடென்று நடுங்கியது. போலீஸ் கமிஷனர் குறித்த வைத்தியசாலையில் ஏராளமான பைத்தியக்காரப் பெண்பிள்ளைகளின் இடையில் அகப்பட்டுக்கொள்ளும் புருஷருக்கு நேரக்கூடிய கதியும் அவ்விடத்தில் நிகழக்கூடிய பயங்கரமான காட்சியும் கலியாணசுந்தரத்தின் மனதில் அப்போதே பிரத்தியட்சமாகத் தோன்றின. ஆகையால், அவன் கட்டுக்கடங்கா அருவருப்பும் திகிலும் கொண்டவன் ஆனான். அப்படிப்பட்ட கொடிய நரகத்திற்குள் நுழையுமுன் தான் தனது உயிரைவிட்டு விடுவதே உசிதமான காரியம் என்று அவன் அப்போதே தீர்மானித்துக் கொண்டவனாய் நிரம் பவும் அசட்டையாகவும் அருவருப்பாகவும் அவரை நோக்கிப் பேசத் தொடங்கி, ‘சபாஷ்! இதுதான் ஆண்மைத்தனம் உங்களுடைய பெரிய மனுஷத்தனம் எவ்வளவென்பது நன்றாக விளங்குகிறது! உங்களைப் போன்ற கண்ணியமான மனப்போக்குடைய மனிதர்கள் இந்தப் போலீஸ் இலாகாவில் இருப்பதனாலேதான் ஜனங்கள் போலீசாரைப் பற்றி நிரம்பவும் பெருமையாகவும் பூஷணையாகவும் பேசுகிறார்கள் இந்த தேசத்து ராஜாங்கத்தார் இப்படிப்பட்ட பெரிய உத்தியோகத்திற்கு உங்களைத் தேடிப் பிடித்தார்களே! அபிராமி என்ற தாதிப் பெண் உண்மையிலேயே நியாயாதிபதியினிடம் பிராது செய்து, நீங்கள் சொல்லுகிற பிரகாரம் தீர்மானம் பெற்றிருப்பதாகவே வைத்துக் கொண்டாலும், அதை நிறைவேற்ற, சட்டம் இப்படிப்பட்ட அநாகரிகமான பரிகாரத்தைத்தானா சொல்லுகிறது? நியாயாதிபதி தீர்மானம் செய்துவிட்டால், அது ஒரு கட்சிக் காரருக்கு அனுகூலமாகவும், இன்னொரு கட்சிக்காரருக்குப் பிரதிகூலமாகவும் இருப்பது இயற்கை யல்லவா? பிரதிகூல மடைந்த கட்சிக்காரர்.அதைப்பற்றி மேல் நியாயஸ்தலங்களுக்கு