பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 103 என்று போலீஸ் கமிஷனர் சொன்னதை நினைக்க நினைக்க, அவனது மனம் கொதித்துத் தேகம் பதைத்தது, தான் அப்படிச் செய்யாத பட்சத்தில், தன்னைப் பைத்தியக்காரிகள் நிறைந்த வைத்தியசாலைக்குள் அடைத்துவிடுவதாகப் போலீஸ் கமிஷனர் கூறியது அவனால் சிறிதும் சகிக்கக் கூடாத பரம அசங்கியமான பிரரேபணையாகத் தோன்றியது. அவ்வளவு பெரிய உத்தியோகத்திலுள்ள அந்த மனிதர்அப்படிப்பட்டமகா இழிவானசதியாலோசனைகளைச் செய்ய எப்படி இணங்கினார் என்ற சந்தேகமும் ஆச்சரியமும் அளவிலடங்காதனவாய்ப் பெருகி அவனது உள்ளத்தை அலைத்து உலப்பிக் கொண்டிருந்தன. உண்மையிலேயே போலிஸ் கமிஷனர் தாம் சொன்னது போலச் செய்கையிலும் நடப்பாரானால், தான் பைத்தியக்காரிகளினிடையில் இருப்பதைவிட, எப்படியாவது உடனே தனது பிராணனை விட்டுவிட வேண்டியதே முடிவென்று அவன் எண்ணிக்கொண்டான். அத்தனை நினைவுகளுக்கும் இடையில் அவனது ஆருயிர்க் காதலியான ஷண்முகவடிவினது சுந்தரவடிவம் அவனது அகக்கண்ணில் தோன்றித் தோன்றி மறைந்து கொண்டிருந்தது. ஆகையால், அப்போது அவள் எங்கே இருக்கிறாளோ, தன்னைப்பற்றி எவ்விதமான எண்ணம் கொண்டிருக்கிறாளோ, இனி அவள் தன் விஷயத்தில் ஆரம்பத்தில் வைத்திருந்த கரைகடந்த வாத்சல்யத்தையும் பிரேமையும் வைத்து முன்போல நிஷ் கல் மிஷமாக நடந்துகொள்வாளோ, அல்லது, தான் சிநேகத்துக்குப் பாத்திரனல்ல என்று நினைத்துத் தன் மீது அருவருப்பும் பகைமையும் பாராட்டுவாளோ என்று அவன் பலவாறு எண்ணமிட்டு சிந்தாக் கிராந்தனாய் இருந்தான். அவ்வாறு அன்றைய இரவு கழிந்தது.

மறுநாள் காலையில் அவன் தனது சயனத்தை விட்டு எழுந்த காலத்தில், அவனது தேகஸ்திதி முதல்நாளில் இருந்ததைவிடப் பன்மடங்கு கேவல நிலைமை அடைந்துவிட்டது. அவனது