பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 பூர்ணசந்திரோதயம்-4 அவன் அத்தகைய இன்பகரமான சிந்தனையில் ஆழ்ந்திருக்கு அவ்விடத்தில் குறுக்கிட்ட ஒரு பனந்தோப்பிற்குள் வண்டி சென்ற காலத்தில் திடீரென்று நாற்புறங்களிலிருந்தும் மனிதர் கு.பிரென்று கிளம்பி வண்டியை வளைத்துக் கொண்டனர். குதிரைகளின் முகத்தில் படேரென்று இரண்டு அடிகள் விழ, குதிரைகள் கிலிகொண்டு திடுக்கிட்டு நின்றுவிட்டன. கருத்துப் பெருத்த பனமரங்கள் போல இருந்த ஐந்தாறு முரட்டு மனிதர்கள் கு.பிரென்று பாய்ந்து உலக்கைகளைப் போலிருந்த பெருத்த தடிகளால் காசாரிகளின் மண்டையை உடைத்துக் கீழே உருட்டி விட்டனர். அந்த விபரீதத்தைக் கண்ட போலீஸ் சிப்பந்திகள் திடுக்கிட்டுப் பெருத்த திகில் கொண்டு எழுந்து வண்டியின் கதவுகளைத் திறந்தனர். அவர்களுள் முக்கியஸ்தனாக இருந்த சிப்பந்தி தனது இடுப்பில் சொருகி இருந்த பிஸ்டல்களை எடுக்குமுன் கலியாணசுந்தரம் குபிரென்று பாய்ந்து பிஸ் டல்களைப் பிடுங்கி வெகு தூரத்துக்கப்பால் எறிந்து விட்டான். வெளியில் இருந்த முரட்டாள்கள் அதே காலத்தில் பாய்ந்து போலீஸ் சிப்பந்திகள் இருவரது கால்களையும் பிடித்து வெளியில் இழுக்க, அவர்கள் படேரென்று மல்லாந்து தரையில் விழுந்தனர். நின்ற நிலைமையில் இறுகலான தரையின் மேல் வீழ்ந்தமையால், அவர்களது தலையின் பின்புறம் பலமாக மொத்துண்டு சிதைந்து போயிற்று. அவர்கள் இருவரும் உடனே மூர்ச்சித்துப் போயினர்.

35 - வது அதிகாரம்

மாயஜாலம்

பூர்ணசந்திரோதயமென்ற அதிசுந்தர ரூபவதி ஜெகன் மோகன விலாசத்தை விட்டுத் தஞ்சை அரண்மனையின் ஏழாவது உப்பரிகைக்குப் போய்ச் சேர்ந்தாள் என்ற விஷயம் முன்னரே கூறப்பட்டதல்லவா. அந்த மின்னற் கொடியாள்