பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17O பூர்ணசந்திரோதயம்-4 பயந்த குணமுடையவள். அக்கிரமத்தில் இறங்குவதென்றால், அதற்கு என் மனம் கொஞ்சமும் இடம் கொடுக்காது. இதுவரையில் நான் என்மனதார ஒரு கொசுவுக்குக்கூடத்துன்பம் செய்யாதவள். இனியும் அப்படியே நடந்து இந்த ஜென்மத்தைக் கடத்தி விடவேண்டும் என்பது என்னுடைய உறுதியான கொள்கை. ஒருவன் அக்கிரம வழியில் குபேர சம்பத்தை அடைந்து ஆயிரங்காலம் வாழ்வதைவிட, நியாயமான வழியில் முயற்சித்துக் கூழ்குடித்து எள்ளளவேனும் செளக்கிய வாழ்வு என்பதையே அறியாமல் இருந்து இறப்பது சர்வ சிலாக்கிய மானது. அது இம்மையில் கஷ்டமாக இருந்தாலும் மறுமையில் பன்மடங்கு பலன் தருவது நிச்சயம். மனிதன் இந்த உலக விஷயங்களைப்பற்றி நடந்து கொள்வதை விட அடுத்த உலக விஷயங்களைப் பற்றி நிரம்பவும் அதிகக் கவனிப்பாகவும் எச்சரிப்பாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்பது என்னுடைய மனப்பூர்வமான நம்பிக்கை. இந்த உலகத்திலுள்ள மனிதர்களால் நடத்தப்படும் நியாயஸ்தலங்களில் செலுத்தப்படும் நீதி முற்றிலும் சரியாக இருக்குமென்று நான் எண்ணுவதற்கில்லை. எல்லாவற்றையும் அறிந்தவனான ஈசுவரனால் அடுத்த உலகில் செலுத்தப்படும் நியாயமோ தவறற்றது, பட்சபாதமற்றது, தப்ப முடியாதது, நிரம்பவும் கொடுமையானது. ஆகையால், நாம் அடுத்த உலகத்தில் பூஜிதையாக நடத்தப்பட வேண்டுமானால், இந்த உலகத்தில் நாம் ஜாக் கிரதையாக நடந்துகொள்ள வேண்டும். அக்கிரம வழியில் எதிர்ப்படும் சுகங்களையும் வருவாய்களையும் நாம் கேவலம் துரும்பாக மதித்து உல்லங்கனம் செய்ய வேண்டும். அவைகளை விஷமென மதித்து அறவே விலக்க வேண்டும். அவைகள் இல்லாவிட்டால், நமக்கு எத்துணை கஷ்ட நஷ்டங்கள் பசி பட்டினிகள் ஏற்படுவதாக இருந்தாலும், நாம் பின்வாங்கக்கூடாது. நியாய வழியில் ஏற்படுவது அற்பசுகமாக இருந்தாலும், அற்ப ஊதியமாக இருந்தாலும், அதை ஏற்று வாழ்வது ஒன்றே பரம சுகமானது. அது அடுத்த உலகத்திலும்,