பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 173 உன்னைக் கொணர்ந்து இங்கே வைத்து இத்தனை ஏற்பாடுகளையும் செய்து இவ்வளவு நீண்டகாலம் உன்னை நினைத்து நினைத்து மனநொந்து தவித்திருந்தேனே, இனி நான் என்னுடைய தீர்மானத்தை நிறைவேற்றாமல் பின்னிடேன். நான் அடைய எண்ணிய பெண்ணை இன்னொரு புருஷன் அடைய நான் பார்த்து ஒருநாளும் சகித்திருக்க மாட்டேன். ஆனாலும், நான் உன் மனசுக்கு விரோதமாகவும், உன் மனம் துன்பப்படும் படியாகவும் உன்னைவற்புறுத்தி என்தீர்மானத்தை நிறைவேற்ற மாட்டேன். நான் இன்னொரு நியாயம் உன்னிடம் சொல்லுகிறேன். அதற்கு நீ சரியான உத்தரம் சொல்ல வேண்டும். அதன்மேல் நான் என்னுடைய முடிவைத் தெரிவிக்கிறேன். இப்போது நீ எடுத்துச்சொன்ன நீதிபோதனையில், ஒரு புருஷன் ஒரு ஸ்திரீயைக் கலியாணம் செய்துகொண்டால், இருவரும் ஒருவரிடத்தொருவர் உண்மையாகவும் உறுதியாகவும் நடந்து கொள்ள வேண்டுமென்றும் புருஷனாவது, பெண் ஜாதியாவது அன்னியர்மேல் ஆசைப்படுவது கூடாதென்றும், அது பெருத்த பாவமென்றும் நீ சொன்னாயல்லவா? உதாரணமாக, ஒரு ஸ்திரீ தன்னுடைய புருஷனுக்கு துரோகம் செய்து, பிற புருஷனை நாடித் தனது கற்பை இழந்துவிடுவதாக வைத்துக் கொள்வோம். அதை அவளுடைய சொந்தப் புருஷன் அறிந்து கொள்கிறான். அப்படிக்கண்ட பிறகும் அந்தப் புருஷன் அவள் விஷயத்தில் ஒழுங்காகவும் ஏகபத்ளிை விரதத்தை அனுஷ்டிப்பவனாகவும் இருக்க வேண்டுமா? அல்லது, அப்படி இருப்பதுதான் சாத்தியமா? அந்த நிலைமையில் அவன் அவளைவிலக்கிவிட்டு வேறொரு பெண்ணைக் கலியாணம் செய்து கொள்வது ஒழுங்கா, அல்லது வேண்டா வெறுப்பாக நடிப்பவளும் களங்கப்பட்டுப் போனவளுமான தன் பெண் ஜாதியையே தொடர்ந்து ஊரார் பழிக்க நடந்து கொள்கிறது ஒழுங்கா? அவன் என்ன செய்வது நியாயம் என்பதைச் சொல் பார்க்கலாம்’

என்றார்.