பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 பூர்ணசந்திரோதயம்-4

பூர்ணசந்திரோதயம், “அந்தச்சந்தர்ப்பத்தில் புருஷன் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்பது அவனுக்குக் கிடைத்தி ருக்கும் சாட்சியத்தைப் பொருத்ததாக இருக்கிறது. தன் மனைவி உண்மையிலேயே தன் கற்பை இழந்ததை அவன் சந்தேகமற நேரிலேயே பார்ப்பானாகில், அவன் வேறு சில தக்க பெரிய மனிதர்களும் அந்த விஷயத்தை மனசாரத் தெரிந்து கொள்ளச் செய்து, அதன்பிறகு அவளை விலக்கிவிட்டு வேறொருத்தியைக் கலியாணம் செய்துகொள்ளலாம். அது சாஸ்திரசம்பந்தமானது. தானே நேரில் பார்க்காமல் அனுமானத்தின் மேலும், பிறர் சொல்வதைக் கேட்டும், அமிதமான பொறாமைக் குணத்தி னாலும், சம்சயத்தினாலும், ஒருவன் தன் சம்சாரத்தின்மேல் சந்தேகங்கொண்டு வெறுத்து அவளை விலக்க எண்ணுவதும் வேறொருத்தியை மணக்க நினைப்பதும் நியாயமல்ல. அல்லது, தான் வேறொருத்தியை அடையவேண்டுமென்று துர்மோகங் கொண்டு வேண்டாத பெண்டாட்டியின் கால் பட்டால் குற்றம், கைபட்டால் குற்றம் என்ற நியாயப்படி, அவள்மேல் இல்லாத பொல்லாத அபாண்டமான தவறுகளையும் சுமத்தி அவளை விலக்க நினைப்பது கொடிதினும் கொடிதான பரம பாதகமாகும். முக்கியமாக இந்த விஷயத்தில் ஏற்படும் வழக்கு நடுநிலை தவறாத அன்னிய மனிதருடைய தீர்மானத்துக்கு விடப்பட வேண்டியதேயன்றி புருஷனே தனக்கு அதிகாரம் இருக்கிறது என்று நினைத்து தன்னிச்சைப்படி நடந்துகொள்வது பெரும்பாலும் தவறாகவே முடியும். இப்போது தாங்களும் அடியாளும் பேசிக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்துக்கும், இப்போது தாங்கள் கேட்ட விபசார தோஷ விஷயத்துக்கும் யாதொரு சம்பந்தமும் இருப்பதாகத் தோன்றவில்லையே! தங்களுடைய பட்ட மகிஷியான மகாராணியார் மகா உத்தம ஜாதி ஸ்திரி. பரிசுத்த ஸ்வரூபிணி என்றாலும் அவர்களுக்கே தகும். அப்படிப்பட்ட அருந்ததி தேவியின் விஷயத்தில்தாங்கள் ஏதாவது தோஷம் கற்பிக்க எத்தனிக்கின்றீர்களா? தாங்கள் அப்படிச் செய்ய வேண்டுமென்று சொப்பனத்திலும் எண்ண