பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 பூர்ணசந்திரோதயம்-4 தெரிந்துகொண்டதேயன்றி வேறல்ல. அப்படித் தெரிந்து கொண்ட விஷயம் உண்மையானதுதான் என்பதை யாரும் நிச்சயமாக நம்பமாட்டார்கள். அதை நம்புவதும் ஒழுங்கல்ல. ஒரு மனிதரிடம் சிலர் நன்மை பெறுகிறார்கள்; சிலர் தீமை பெறுகிறார்கள். நன்மைப் பெறுகிறவர்கள் கொடுத்தவரை அபாரமாகப் புகழுவார்கள். தீமை பெறுகிறவர்கள் அது போலவே அவரை இகழ்ந்து தூஷணையாகப் பேசுவார்கள். ஆகையால், ஒருவரைப் பற்றிப் பிறர் சொல்லும் அபிப்பிராயத்தை நாம் உடனே அப்படியே நம்பிவிடக் கூடாது; அதை நிரம்பவும் ஜாக்கிரதையாகவே நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படியிருக்க, நீ என் பட்டமகிஷியைப் பற்றி வாய் கொண்டமட்டும் புகழ்ந்து பேசியது சரியல்ல. இதோ நேற்றைய தினம் தபாலில் பூனாவிலிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்திருக்கிறது. அதில் எழுதப்பட்டுள்ள சங்கதிகளை வாயில் வைத்துப் பேசவும் கூசுகிறது. ஆகையால், இந்தக் கடிதத்தை நீயே படித்துப் பார்’ என்று கூறியவண்ணம் தமது சட்டைப் பையிலிருந்த ஒரு கடிதத்தை எடுத்துக்கோபமாக அவள் மீது எறிந்தார். அதைக் கண்டு திடுக்கிட்டுத் திகைப்பவள் போல நடித்த பூர்ணசந்திரோதயம், தான் அந்தக் கடிதத்தை எடுத்துப் படிக்கலாமோ படிக்கக் கூடாதோ வென்று யோசிக்கிறவள் போலச்சிறிது நேரம் தயங்கியபின் மெதுவாக அந்தக்கடிதத்தை எடுத்துப் பிரித்துப் படிக்கலானாள். அது அடியில் வருமாறு எழுதப்பட்டிருந்தது:

பூனா நகரம்,

வருஷம்- மாசம் தேதி.

பரமரகசியமான விஷயம்.

ராஜாதிராஜ அதிராஜ தீரரான தஞ்சைமா நகரத்தில் குமாரராஜா அவர்களது சன்னிதானங்களில் ஆயிரங்கோடி தண்டனிட்டுத் தாளும் தடக்கையும் கூப்பி நிரம் பவும்