பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 177 வணக்கமாகச் செய்துகொள்ளும் விண்ணப்பம். நான் பூனா தேசத்தில் தங்கள் மாமனாருடைய அரண்மனையில் உள்ள ஒர் உத்தியோகஸ்தன். நான் இந்த அரண்மனையாரின் ஆதரவிலும் போஷணையிலும் இருந்து வளர்ந்து வயிறு வளர்த்து வருகிறவன் ஆதலால், நான் இந்த ஊர் மகாராஜாவிடத்திலும், அவர்களுடைய குடும்பத்தைச் சேர்ந்த மனிதர்களிடத்திலும், நன்றி விசுவாசமும் பற்றும் உடையவனாக இருக்கக் கடமைப்பட்டவன்; அவர்களுடைய குற்றம் குறைபாடுகளை எல்லாம் வெளியிடாமல் மறைத்து, அவர்களைப் பற்றி அபாரமாகப் புகழ்ந்தும் ஸ்தோத்திரம் செய்தும் பேசவேண்டிய வன். அப்படியிருக்க, நான் அதற்கு நேர் விரோதமாக நடந்து கொள்வதைக் கண்டு தாங்கள் நிரம்பவும் ஆச்சரியமடைவீர்கள் என்பது நிச்சயமான விஷயம். அதுவுமன்றி, நான் ஏதோ பகைமையை மனதில் வைத்துக்கொண்டு பொய்யான விஷயங்களை மெய் போல எழுதியிருக்கிறேன் என்ற சந்தேகமும் தங்களுடைய மனதில் தோன்றுவது இயற்கையே. அப்படி இருந்தாலும், தங்களுடைய சந்தேகம் கொஞ்ச காலம் வரையில்தான் இருக்கும். நான் சொல்லப்போவது உண்மையான விஷயந்தான் என்பதைத் தாங்கள் கண்கூடாகவும் தக்க சாட்சியங்களின் மூலமாகவும் திருப்திகரமாக உணரும் போது தங்களுடைய சந்தேகம் தானாகவே விலகிக் போகும் என்பது நிச்சயம். அதுவரையில் நான் எவ்வளவு உறுதியாகச் சொன்னாலும், பிரமான பூர்வமாகச் சொன்னாலும், தங்களுடைய மனதில் நம்பிக்கை உண்டாவது சாத்தியமான காரியமல்ல. ஆகையால், அதைவிட்டு, நான் விஷயத்தைச் சொல்லுகிறேன்.

2. எங்கள் மகாராஜாவின் குமாரத்தியும், தங்களுடைய தர்ம பத்தினியும் பட்டமகிஷியுமான ஸ்ரீமதி லலிதகுமாரி தேவி தங்களை மணந்து தங்கள் ஊருக்கு வருவதற்கு முன் இந்த ஊரில் இருந்த காலத்தில் நான் அவர்களோடு பழகிப்

.