பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 183 பயப்படுகிறாள் என்பது இந்தக் கடிதத்திலிருந்து நமக்கு நன்றாகத் தெரிகிறதல்லவா? அவளைப்போல சமயோசிதமாக நடந்து கொள்ளுகிறவர்களே காரியவாதிகளன்றி என்னைப் போல இருப்பவர்களெல்லாம் எதற்கு உபயோகம்? நீ இந்தக் கருடபுராணம் ஒன்றை மாத்திரந்தான் படித்துப் பார்த்தாய்

போலிருக்கிறது. இன்னும் முக்கியமான சில புராணங்கள் இருக்கின்றன. அவைகளை நீ படித்திருந்தால், இந்தக் கருட புராணத்தை அவ்வளவாக பொருட்படுத்த மாட்டாய். அந்த லலிதகுமாரி தேவி எல்லாப் புராணங்களையும் படித்திருந்

தாலும், முக்கியமாக அவளுடைய மனதிற்குப் பிடித்த புராணம்

கொக்கோகப் புராணம் ஒன்றே. ஆகையினாலே தான் அவள் தன்னுடைய தகப்பனார் இறக்கும் சமயத்தில் இருக்கிறார் என்பதையும் இலட்சியம் செய்யாமல் அந்தப் புண்ணிய

புராணத்தின் கொள்கைகளைக் கை நழுவவிடாமல்

கடைபிடித்துக் கொண்டிருக்கிறாள். மற்ற எந்தப் புராணத்தை

மறந்தாலும் அந்தப் புராணத்தை மாத்திரம் மறப்பதும் அசட்டை செய்வதும் பதிவிரதா தர்மமாகாது அல்லவா! அதனாலேதான்,

அவள் புருஷனை விட்டுப் போன இடத்திலும் பதிவிரதா தர்மத்துக்குப் பழுது ஏற்படாமல் நடந்து கொள்ளுகிறாள். நீயும்

பதிவிரதையாக இருக்க நிரம்பவும் ஆசைப்படுகிறாயே. அவள் படித்துள்ள அந்த முக்கியமான புராணத்தை நீயும் படிக்க வேண்டாமா?’ என்று புரளியாகவும் குறும்பாகவும் கூறினார்.

அதைக் கேட்ட பூர்ணசந்திரோதயம் எதையும் பேச அறியாத பேதைபோல நடித்து, “ஆகா! என்ன ஆச்சரியம் இது மகா ராஜாவின் மனம் பெண்பாலரிடத்தில் கொஞ்சமும் இரங்காத ஈவிரக்கமற்ற கல் என்பது நன்றாகத் தெரிகிறது. இந்தக் கடிதத்தைப் படித்தபிறகு என் மனம் புண்பட்டு நொந்து தவிக்கிறது. இந்த நிலைமையில் தாங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் ஈட்டியைப் புண்ணில் சொருகுவதுபோல இருக்கிறதேயன்றி வேறல்ல. இப்படிப்பட்ட அவதூறு அந்த