பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O6 பூர்ணசந்திரோதயம்-4 முள்ள நோட்டுகள் இருக்கின்றன. அவைகளையெல்லாம் அப்படியே எடுத்துக் கொண்டு நீ போய்விடு. இதோ இந்த நாற்காலியின் பின் புறத்தில் ஒரு விசை இருக்கிறது. அதை அழுத்தினால், இந்த வளையங்கள் நகர்ந்துகொள்ளும். நான் எழுந்து விடுவேன்’ என்று மிக்க அன்பாகவும் மரியாதை

யாகவும் பேசினார்.

அதைக்கேட்ட கட்டாரித்தேவன் உடனே அவரண்டை நெருங்கி வந்து அவரது சட்டைப் பையில் தனது கையை நுழைத்து அதற்குள்ளிருந்த நோட்டுக் கற்றையை வெளியில் இழுத்து பக்கத்திலிருந்த மேஜையின் மீது வைத்தவனாய் அவரை நோக்கி, ‘ஜெமீந்தார் ஐயா! இவ்வளவு பெரிய மனிதரான ஜெமீந்தாருடைய வீட்டுக்கு நான் விருந்தாளியாக வந்து இந்த அற்பத் தொகையைச் சம்பாவனையாக வாங்கிக் கொண்டு போனால் ஊரார் சிரிக்கமாட்டார்களா! ஆகையால், எனக்கு இது போதாது? நான் இவ்வளவோடு போகக் கூடியவனல்ல. நீங்கள் ஒர் இரும்புப்பெட்டி வைத்திருப்ப தாகவும் அதற்குள் குபேர சம்பத்தே அடங்கியிருப்பதாகவும் நான் நெடுநாளாகக் கேள்வியுற்றிருக்கிறேன். அந்தப்பெட்டி இதோ பக்கத்திலுள்ள மாடத்தில் இருக்க நான் கொஞ்ச நேரத்திற்கு முன் கண்டேன். அதன் திறவுகோலை நீங்கள் இப்போது என்னிடம் கொடுக்க வேண்டும். நான் போய்ப் பெட்டியைத் திறந்து அங்குள்ள சகலமான ஆஸ்திகளையும் எடுத்துக்கொண்டு போகத் தீர்மானித்து விட்டேன். எடுங்கள் திறவுகோலை’ என்றான்.

அதைக்கேட்ட ஜெமீந்தார் திடுக்கிட்டுப் பெரிதும் திகில் கொண்டார். எத்தனையோ லக்ஷக்கணக்கில் பெறக்கூடிய நோட்டுகளும் ஆபரணங்களும் நிறைந்துள்ள தமது இரும்புப் பெட்டியின் திறவுகோலை அவனிடம் கொடுத்தால், அவன் அதிலுள்ள சகலமான பொருட்களையும் அபகரித்துக்கொண்டு போய்விடும் பட்சத்தில் தாம் பரம ஏழை ஆகிவிட நேருமே