பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 பூர்ணசந்திரோதயம்-4 பவானியம்பாள்புரம் ஜெமீந்தாரின் புத்திரரான நீலமேகம் பிள்ளையினிடமுள்ள கடிதங்களையும் அபகரித்து வரச்செய்ய வேண்டும் என்ற முடிவும் செய்து கொண்டாள். இன்ஸ்பெக்டர் அவனைப் பிடிக்கும்பொருட்டு தேடிக் கொண்டு வந்ததாகவும், தான் அவருக்குத் தக்க சமாதானம் சொல்லி அனுப்பி விட்டதாகவும் அவனிடம் சொன்னால், அவன்தன்னிடம் நன்றி விசுவாசமுள்ளவனாக இருப்பானென்ற தீர்மானமும் அவள் செய்து கொண்டவளாய், அவ்விடத்தை விட்டு விரைவாக அப்பால் போய்த் தானும் கட்டாரித்தேவனும் பேசிக் கொண்டிருந்த விடுதியை அடைந்து, அவன் அவ்விடத்தில் இருக்கிறானா என்று நாற்புறங்களிலும் திரும்பித் திரும்பிப் பார்த்தாள்; அவன் காணப்படவில்லை. அவன் அவ்விடத்தில் இருந்து தோட்டத்திற்குச் செல்லும் வழியில் துரிதமாக நடந்து சென்று இரண்டொரு விநாடி நேரத்தில் தோட்டத்தை அடைந்து, அதற்குள் புகுந்து தேடிப் பார்க்க லானாள். அவன் எங்கும் காணப்படவில்லை. அது விநோதமான மரஞ் செடி கொடிகள் நிறைந்த விஸ்தாரமான அழகிய உத்யானவனம் ஆதலால், முதன் முதலாக அவ்விடத்திற்கு வந்த கட்டாரித்தேவன் அங்குள்ள வேடிக்கைகளைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை கொண்டு, அதற்குள் புகுந்து எவ்விடத்திலாவது காணப்படுவானோ என்ற யோசனை தோன்றியது. ஆகையால், லீலாவதி அந்த உத்யான வனத்திற்குள் நுழைந்து ஓரிடம் விடாமல் தேடிப்பார்த்து அதற்கப்பாலும் சென்று மதிலையடைந்து ஒரிடத்தில் அதன் ஒரமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த கற் குவியலின் மேல் ஏறி நின்று அப்புறத்தில் தனது பார்வையைச் செலுத்தினாள். மதிலின் அப்புறத்தில் அலங்கமும் அகழியும் தென்பட்டனவேயன்றி மனிதர் எவரும் காணப்படவில்லை. கட்டாரித்தேவன் இன்ஸ்பெக்டருக்குப் பயந்து ஒட்டமும் நடையுமாகத் தமது மாளிகையைவிட்டு வெளிப்பட்டு அப்பால் போய் விட்டான் என்ற நிச்சயம் ஏற்பட்டது. அதற்குமேல் தான் என்ன