பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 23

செய்வது என்ற கேள்வி அவளது மனதில் எழுந்தது. கட்டாரித்தேவன் எங்கே இருக்கிறான் என்பது அவளுக்குத் தெரியாது ஆகையால், தான் அவனை மறுபடியும் எப்படி சந்திப்பது என்று அவள் நிரம் பவும் ஆழ்ந்து சிந்தனை செய்தாள். எவ்விதமான மார்க்கமும் தோன்றவில்லை. ஆகையால், அவள் அதற்குமேல் அவ்விடத்தில் நிற்க மனமற்றவளாய் உத்யானவனத்தை விட்டு அடிமேலடி வைத்து நடந்தவளாய் மாளிகையின் உட்புறத்திற்கு வந்து சேர்ந்தாள்.

33 - வது அதிகாரம் சதிவெல்லுமோ விதிவெல்லுமோ

அன்றைய தினம் மாலை ஏழு மணி சமயமாயிற்று. மருங்காபுரி ஜெமீந்தாரினது மாளிகைக்குள் வழக்கப்படி ஏராளமான தீபங்கள் பிரகாசித்துக் கொண்டிருந்தன. மாரியம்மன் கோவிலுக்குப் போய்விட்டு வருவதாகச் சொல்லி அன்றையதினம் காலையில் தமது மாளிகையைவிட்டுப் புறப்பட்டுப்போன மருங்காபுரி ஜெமீந்தார் வெண்ணாற்றங் கரையின் மேலிருந்த தமக்குச் சொந்தமான இன்னொரு பங்களாவிற்குப் போய்த் தமது போஜனம் முதலியவற்றை முடித்துக்கொண்டு அவ்விடத்திலேயே செளக்கியமாகப் படுத்துப் பகல் முழுதும் தூங்கிவிட்டு மாலையில் எழுந்து நல்லவாசனைத் திரவியங்களும் பன்னிரும் கலந்த ஜலத்தில் நெடுநேரம் ஆழ்ந்திருந்து நீராடி விலையுயர்ந்த பட்டாடை களையும், வைர ஆபரணங்களையும் அணிந்து மாதுரியமான போஜனமுண்டு, வாசனைத் தாம் பூலம் அத்தர் ஜவ்வாது முதலியவை தரித்து இருபத்தைந்து வயதே அடைந்த அதிகோலாகல யெளவனப் புருஷராய் மாறி ரதிதேவியின் மாளிகையை நாடிச்செல்ல ஆயத்தப்படும் மன்மதனோ எனக் கண்டோர் ஐயுறும்படி ஆடம் பராசாரியராய் வெளிப்பட்டு