பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 267

பதார்த்தங்களை வாங்கிக் கொணர, இருவருமாக உண்டுகளித்து உல்லாசமாக உரையாடிய வண்ணம் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தனர்.

அன்றையதினம் பகற்பொழுது கழிந்தது. மாலை வேளை வந்தது. இருவரும் அவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டு ஊருக்கு வெளியில் போய் வேடிக்கையாக உலாவிவிட்டுத் திரும்பி வர வேண்டுமென்று உத்தேசித்திருந்த காலையில், அவர்களிருந்த அறைக்குள் ஒரு சிறுவன் திடீரென்று நுழைந்தான். அவனுக்குச் சுமார் பத்து வயதிருக்கலாம். அவன் உள்ளே வந்த வுடனே சாமளராவை பார்த்து, “நீங்கள் எந்த ஊரிலிருந்து வந்திருக்கிறீர்கள்?’ என்றான். சாமளராவ், ‘தஞ்சாவூரிலிருந்து வந்திருக்கிறோம்’ என்றான்.

உடனே பையன் தனது மடியிலிருந்த ஒரு கடிதத்தைச் சரெலென்று வெளியில் இழுத்து அவர்களுக்கு எதிரில் போட்டுவிட்டு அவ்விடத்தை விட்டு வெளியில் போய் ஒரே ஒட்டமாக ஒடிப்போய்விட்டான். அவனோடுகூட யாராகிலும் வந்து சத்திரத்து வாசலில் மறைந்திருக்கிறார்களோ என்பதைப் பார்க்க வேண்டும் என்ற கருத்தோடு சாமளராவ் உடனே எழுந்து அவ்விடத்தை விட்டு வெளியில் போய்ப்பார்க்க, கடிதம் கொடுத்த பையன் காணப்படவே இல்லை. அவன் ஒட்டமாக ஒடி எங்கேயோ போய் மறைந்து கொண்டான் என்று நினைத்துக் கொண்டே சாமளராவ் மறுபடியும் திரும்பி இளவரசரிடம் வந்து சேர்ந்து, “பையன் ஒடியே போய் விட்டான், கண்ணில் படவே இல்லை’ என்றான்.

இளவரசர் புன்னகையோடு, ‘சரி அவன் போனால் போகிறான். நீ இந்தக் கடிதத்தைப் பிரித்துப் படி. என்ன எழுதியிருக்கிறான் என்பதைப் பார்க்கலாம்’ என்றார்.

உடனே சாமளராவ் அவ்விடத்தில் போடப்பட்ட கடிதத்தை எடுத்துப் பிரித்துப் படித்தான். அது அடியில் வருமாறு எழுதப்பட்டிருந்தது: