பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 பூர்ணசந்திரோதயம்-4 இன்னொரு புதிய யோசனை தோன்றியது. அவள் உடனே அந்த ஏணியை மேலே இழுத்து வாங்கி அதை ஒட்டின்மேல் நீளமாகப் படுக்க வைத்துவிட்டு ஒட்டின் வழியாக விசையாக நடந்து முன் கட்டை நோக்கிச் சென்றாள். அவள் அவ்வாறு ஏணியை மேலே இழுத்துவைத்தது ஏன் என்றால், கிழவி உள்ளே வந்தவுடன்ஏணி இருப்பதைக் கண்டு உடனே உண்மையை யூகித்துக்கொண்டு மேலே ஏறிப் பார்ப்பாளென்றும், அப்படிப் பார்த்தால், தான் இருப்பது தெரிந்துபோகுமென்றும் நினைத்தே அவள் அவ்வாறு முன்னெச்சரிப்பாக நடந்து கொண்டாள். தான் ஒட்டின்மேல் நிமிர்ந்து நின்றபடிநடந்துசென்றால் பக்கத்து வீடுகளிலுள்ளோர் தன்னைக் கவனிப்பார்களென்ற நினைவைக் கொண்டவளாய் லீலாவதி குனிந்தவண்ணம் மெதுவாக ஒட்டின்மேல் கால்களை வைத்து இரண்டாம் கட்டின் தாழ்வாரத்திற்கு மேலாகவே நடந்து முன் கட்டிற்குப் போய்ச் சேர்ந்தாள். தன்னை அபகரித்து வந்த முரட்டு மனிதன் முன்கட்டில்துங்கிக்கொண்டிருக்கிறான் என்று கிழவி சொன்னது உண்மை போலவும் பொய் போலவும் சந்தேகமாகவே இருந்தது. ஆனாலும் தான் எச்சரிப்பாகவே செல்லவேண்டுமென்று நினைத்த லீலாவதி அந்த முரட்டு மனிதன் விழித்துக் கொள்ளாதபடி சிறிதும் ஒசை செய்யாமல் மெதுவாகத் தனது அடிகளைப் பெயர்த்து வைத்துத் தாழ்வாரத்தில் மேல் பக்கமாகவே குனிந்து நடந்து முன்னால் போனாள். தான் நடுத் தாழ்வாரத்தில் போய்க் கொண்டி ருக்கும்போது கிழவி திரும்பி வந்துவிடப் போகிறாளே என்ற கவலையும் திகிலும் அவளை அபாரமாக நடுக்கின. ஆனாலும், அவள் நிரம்பவும் ஜாக்கிரதையாகவும், ஒசை செய்யாமலும் விசையாகவும் நடந்து முன் கட்டுத் தாழ் வாரத்தின் மேல் பக்கமாகவே நடந்து வாசல் வழிப்பக்கம் திரும்பிப் போய் முன் பக்கத்து நடைக்குமேலிருந்த கூரையின் உள் வாயை அடைந்து அவ்விடத்தில் அப்படியே உட்கார்ந்து கொண்டாள். உட்கார்ந்தவள் தான் எடுத்துவந்திருந்த கூடையை முன்னால் வைத்து அதன் மறைவில் ஒளிந்திருந்தபடி கூரையோடு