பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 317 கரையாகப் படுத்துக்கொண்டாள். அவ்வாறு அரைக்கால் நாழிகை நேரம் கழிந்தது. அந்த அற்பகாலமும் அவளுக்கு ஒரு மலைபோலப் பெருத்துத் தோன்றியது. கிழவி சொன்னதுபோல ஒருகால் அந்த முரட்டுத் திருடன் முதல் கட்டில் தூங்கிக் கொண்டிருந்து தற்செயலாகவோ, தான் நடந்த ஒசையைக் கேட்டோ விழித்துக்கொண்டு வந்து தான் இருந்ததைக் கண்டு

கொண்டால், அதோடு தான் தப்பிப்போக வேண்டுமென்ற கருத்து முற்றிலும் கெட்டுப் போவதோடு, அதற்குமேல், தான் தப்ப முடியாதபடி அவர்கள் தன்னை நிரம் பவும் ஜாக்கிரதையாகச் சிறை வைத்துவிடுவார்கள் என்ற பயம் தோன்றி அவளை வதைத்துக்கொண்டே இருந்தது. தான் கூரைமேலிருப்பதை அந்தக் கிழவி பார்த்து விடுவாளோ என்ற பயமும் கவலையும் இன்னொரு பக்கத்தில் வருத்திக் கொண்டிருந்தன.

அந்த நிலைமையில் வாசல் கதவு திறக்கப்பட்ட ஒசை கேட்டது. கிழவி தனக்காகப் பால் பழங்களை வாங்கிக்கொண்டு திரும்பிவந்து விட்டாள் என்று லீலாவதி உடனே உணர்ந்து கொண்டாள். தான் கூரையின்மேல் இருப்பதைக் கவனிக்காமல் அவள் முற்றத்தின் வழியாகச் சென்று இரண்டாங் கட்டிற்குள் போய்விட வேண்டுமே என்ற மலைப்பும் திகிலும் நடுக்கமும் தோன்றி லீலாவதியைப் பிடித்துக்கொண்டன. அவள் தனது சர்வாங்கத்தையும் மூச்சையும் ஒடுக்கிக் கொண்டு ஒசை செய்யாமல் கூடையின் மறைவில் ஒடுங்கிக் கிடந்தாள். கதவு மறுபடியும் சாத்தி உட்புறத்தில் தாளிடப்பெற்ற ஒசையும் கேட்டது. இரண்டொரு விநாடியில் கிழவி நடையைக் கடந்து முற்றத்திற்கு வந்து இரண்டாங் கட்டிலின் வாசலை நோக்கி நடந்தாள். அந்தச் சமயந்தான் லீலாவதிக்கு நிரம் பவும் அபாயகரமானதருணமாக இருந்தது. கிழவி தற்செயலாகப் பின்புறம் திரும்புவாள். ஆனால், ஒட்டின்மேல் கூடை இருப்பது எப்படியும் அவளது திருஷ்டியில் படும். அவள் உடனே