பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 பூர்ணசந்திரோதயம்-4 விருந்து அளித்தாராம். இளவரசருக்கும் என் தமயனாருக்கும் நிரம்பவும் அன்னியோன்னியமான சிநேகம் உண்டு. அவர் இவரை அழைத்துக்கொண்டு வரும்படி ஒர் ஆளிடம் கடிதம் கொடுத்து அனுப்பினாராம்; இவர் காலையில் புறப்பட்டு வண்டியில் ஏறிக்கொண்டு கொஞ்சதூரம் போன சமயத்தில் எதிரில் வந்த அந்த ஆள் இவரைக் கண்டுபிடித்து கடிதத்தைக் கொடுத்தானாம். கடிதத்தின் விஷயத்தை அறிந்து கொண்ட வுடனே இவர் இளவரசருடைய பிரியத்துக்கு விரோதமாக நடந்துகொள்வது உசிதமல்லவென்று நினைத்து நேராக அரண்மனைக்குப் போனாராம். போய், வண்டியை மாத்திரம் சாமான்களோடு மாரியம்மன் கோவிலுக்கு அனுப்பி விட்டுத் தாம் பிற்பகலில் வந்து சேருவதாகச் செய்தி சொல்லி அனுப்பினாராம். வண்டி அப்படியே முன்னால் போய்விட்ட தாம். அவர் மாத்திரம் அரண்மனையில் இருந்தாராம். இளவரசர் அவரைச் சாயுங்காலம் வரையில் விடவில்லையாம்; அதற்கு மேல் அவர் அரண்மனையை விட்டுப் புறப்பட்டு விளக்கு வைக்கும்போதுதான் மாரியம்மன் கோவிலுக்குப் போய்ச் சேர்ந்தாராம். போனவுடனே அவர் நீ வந்திருக்கிறாய் என்ற சங்கதியைத்தான்முதன்முதலில் கமலத்தினிடம் சொன்னாராம். அந்தச் சங்கதியைக் கேட்டவுடனே கமலம் அடக்கமுடியாத சந்தோஷத்தினால் அப்படியே துள்ளிக் குதித்தாளாம்; நிரம்பவும் ஆனந்தமும், குதூகலமும் அடைந்து உன் rேமத்தைப் பற்றிப் பல தடவைகளில் விசாரித்ததன்றி, உங்கள் அத்தையை நீ தனியாக விட்டு வந்த காரணம் என்ன என்பதை அறிந்துகொள்ள வேண்டுமென்றும், உன்னைப் பார்க்க வேண்டுமென்றும் அளவற்ற ஆவல் கொண்டு துடித்தாளாம். உன்னை அங்கேயே அழைத்துக்கொண்டு வரக்கூடாதா என்று சொல்லி, தன்னை அனுப்பும் படி கேட்டுக் கொண்டாளாம். என் தமயனாரும் அண்ணியும் அவளைச் சாந்தப்படுத்தி இரண்டொரு நாழிகையில் இராத்திரி போஜனத்தை முடித்துக்கொண்டு புறப்பட்டுப் போகலாம் என்று சொல்லி கமலத்தை