பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 35

நிறுத்திவிட்டு இந்த ஆளை முன்னால் அனுப்பி வைத்திருக்கிறார்கள். இன்னும் இரண்டொரு நாழிகை சாவகாசத்தில் கமலம் வந்துவிடுவாள். ஆனால், என் தமயனார், அண்ணிக்குத்துணையாக அங்கேயே இருந்து காலையிலேதான் வருவாராம். கமலம் புறப்பட்டு இந்நேரம் பாதிவழி தூரத்துக்கு மேல் வந்திருப்பாள். ஆய்விட்டது. இன்னும் ஒரு நாழிகைக்குள்ளாகவே அவள் இங்கே வந்து சேர்ந்துவிடுவாள்’ என்று கரைகடந்த மகிழ்ச்சியோடு கூறினாள்.

அவள் கூறிய வரலாறு முழுதும் உண்மையென்றே நம்பின நிஷ் கபடியான ஷண்முகவடிவு அதிசீக்கிரத்தில் தானும் தனது அக்காளும் சந்தித்துப் பேசப்போகிறோம் என்ற நினைவினால் அபரிமிதமான மன வெழுச்சியும், கட்டுக் கடங்காப் பூரிப்பும் மனதில் அடங்கா ஆவலும் அடைந்தவ ளாய், “இங்கே இருந்து மாரியம்மன் கோவில் என்ற ஊர் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது?’ என்று வினவினாள். -

அதைக்கேட்ட லீலாவதி, “அதிகதுரமில்லை; மூன்று மயில் தூரம் தான்’ என்றாள்.

ஷண்முக வடிவு, ‘அப்படியானால் அங்கே இருந்து புறப்பட்டு இங்கே வந்துசேர இரண்டு மணி சாவகாசமாவது பிடிக்காதா?’ என்றாள்.

லீலாவதி, “எதற்காக அவ்வளவு நேரம்? இரண்டு நாழிகை கூடப் பிடிக்காது?” என்றாள்.

அதைக் கேட்ட ஷண்முகவடிவு சந்தோஷப் பெருக்கைத் தாங்க மாட்டாமலும், அதற்குமேல் என்ன பேசுவதென்பதை உணராமலும் சிறிது நேரம் மெளனம் சாதித்திருந்தாள். அவ்வாறு கால்நாழிகை நேரம் கழிந்தது. அதன்பிறகு ஷண்முகவடிவு லீலாவதியை நோக்கி, “ஏனம்மா உங்கள் தமயனார் இந்த ஊர் அரண்மனையில் ஏதோ விருந்துக்காகப் போனார்கள் என்று சொன்னர்களே; அரண்மனையில் இன்றையதினம் என்ன விசேஷம்?’ என்றாள்.