பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 பூர்ணசந்திரோதயம்-4

உடனே லீலாவதி சந்தோஷமாகப் பேசத் தொடங்கி, ‘இந்த ஊர் அரண்மனையில் விசேஷத்துக்கு என்ன குறை? இந்த ஊர்ப் பெரிய அரசர் நிரம்பவும் வயதான கிழவர். அவர் ராஜ்ஜிய விஷயங்களிலேயே தலையிடுவதில்லை. அவருடைய மூத்த குமாரர்தான் இளவரசர். அவர்தான் மகாராஜாவின் சர்வ அதிகாரங்களையும் வகித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் நிரம் பவும் குதூகல புருஷர். அவர் எப்போதும் கோலாகலமாகவும் உல்லாசமாகவுமே இருப்பார். அவருக்குப் பணத்துக்குக் குறைவா, சாமான்களுக்குக் குறைவா? ஜனங்கள் நெற்றி வேர்வை ஜலத்தில் விழ உழைத்துப் பாடுபட்டுத் தேடும் பொருள்களுக்கெல்லாம் இவர்தான் பாத்யஸ்தர். அவைகளை யெல்லாம் நினைத்தபடி விரயம் செய்ய அவருக்குச் சுயேச்சையான அதிகாரம் இருக்கிறது. அப்படி இருக்கையில் விருந்துக்கென்ன குறைவு? இந்த அரண்மனையில் நித்திய கலியானமாகத்தான் இருக்கும். அதுவுமன்றி அவர் எப்போதும் ஸ்திரீலோலராகவே இருந்து வருபவர். இந்த ஆகாசத்திலுள்ள நட்சத்திரங்கள் எத்தனை என்று நாம் ஒரு வேளை கணக்கிட முடிந்தாலும் முடியும். இந்த இளவரசருடைய ஆசைநாயகிகள் எத்தனைபேர் என்பதைக் கணக்கிடவே முடியாது. இப்போது சமீபகாலத்தில் இந்த ஊரில் பூர்ணசந்திரோதயம் என்று ஒரு பெண் எங்கே இருந்தோ வந்து சேர்ந்தாள். அவள் ஏதோ ஒரு தேசத்து மகாராஜாவினுடைய அபிமான புத் திரியென்று சொல்லிக் கொண்டு நிரம்பவும் ஆடம்பரம் செய்து ஆண்வாடையே தன்மேல் வீசக்கூடாதென்று தடபுடல் செய்துக் கொண்டிருந்தாள். ஆனால், அவள் நிரம் பவும் அற்புதமான அழகு வாய்ந்தவளாம். பார்ப்பதற்குத் தத்ரூபம் அப்லரஸ்திரீ போலவே இருப்பாளாம்; வாய்ப் பேச்சிலோ மகா சாமர்த்திய சாலியாம். எப்பேர்ப்பட்டவராக இருந்தாலும் அவளுடன் பேசி வெல்ல முடியாதாம். புருஷர்களை மயக்கும் ஸாகலங்களுக்கெல்லாம் அவளை உற்பத்தி ஸ்தானமாகச் சொல்லலாம். அவள் சில மாசகாலமாக இந்த ஊரில் அழகான