பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 37

ஒரு மாளிகையில் வந்திருந்துகொண்டு சகலரும் தன்னைப் பார்க்கும்படி மேன்மாடத்திலிருந்து பஞ்சவர்ணக் கிளிகளை வைத்துக் கொண்டு கொஞ்சிக் குலாவுவதும், சாயுங்கால வேளைகளில் வம் புலாஞ் சோலையில் உலாவப் போய் ஊர் முழுதும் சுற்றி வருவதுமாய் நிரம்பவும் ஆடம்பரமாக இருந்து வந்தாளாம். இந்த ஊரிலுள்ள இளவரசர் முதல் சகலமான பெரிய மனிதர்களும் அவளைக் கண்டு மதிமயங்கி அதே பைத்தியமாக அலைந்து திரிந்தார்களாம். இளவரசரும் இன்னும் நாலைந்து மனிதரும் சேர்ந்து அவளை வெல்வதாகப் பந்தயம் ஏற்படுத்திக் கொண்டு ஒவ்வொருவராக அவளிடம் போய்ப் பலவகையில் தந்திரம் செய்து லக்ஷக்கணக்கில் அவளுக்குப் பொருள் கொடுப்பதாகச் சொல்லி அவளுடைய மனசைக் கலைக்கப் பார்த்தார்களாம். அவள் யாருக்கும் இனங்காமல் எல்லோரை யும் அவமானப்படுத்தி அனுப்பி விட்டாளாம். ஆனால், அதன்பிறகு அவள் தான் சொந்தமாக வைத் திருந்த மாளிகையை விட்டு, அரண்மனையில் ஏழாவது உப்பரிகையில் ராஜஸ்திரீகள் வசிக்கும் இடத்திற்குப் போய் அவ்விடத்திலேயே இருந்து வருகிறாளாம். இளவரசர் அவளைக் கலியாணம் செய்துகொள்ளப் போவதாக ஊரில் ஜனங்கள் சொல்லிக் கொள்ளுகிறார்களாம். அவளை சந்தோஷப் படுத்தவேண்டு மென்று இளவரசர் பலவகையில் பணத்தை வாரி வாரி இறைத்து விருந்துகளும், வேடிக்கைகளும், பாட்டுக் கச்சேரிகளும் நடத்தி வருகிறாராம். அவள் யாரோ ஒரு தாசியின் மகளாகத்தான் இருக்க வேண்டும் என்று ஜனங்கள் அனுமானிக்கிறார்கள். அவள் நிரம்பவும் சாமர்த்தியம் செய்து இளவரசருடைய மனசை மயக்கி மோகிக்கச் செய்து விட்டாள். அவர் அவளைக் கலியாணமே செய்து கொள்வார் போலிருக்கிறது. இப்போதே அவர்கள் இருவரும் புருஷன் பெண்சாதி போல இருந்து வருகிறார்கள் என்றும் ஜனங்கள் சொல்லிக் கொள்ளுகிறார்கள். அவள் சம்பந்தமாகத்தான் இன்றையதினம் ஏதாவது விருந்து நடத்தப்பட்டிருக்க வேண்டும்’ என்றாள்.