பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 45 என்ற சந்தேகம் தோன்றினாலும், அப்படி இராதென்ற நிச்சயமும் உண்டாயிற்று. தான் அகப்பட்டுக்கொண்டநாற்காலி ஏதோ விசை வைத்த நாற்காலி என்பது தனக்கே நன்றாகத் தெரிந்தது ஆகையால், அது லீலாவதிக்கும் அவசியம் தெரிந்திருக்க வேண்டும் என்றும், தெரிந்தே தன்னை அதில் மாட்ட வைத்திருக்கிறாள் என்றும் ஷண்முகவடிவு யூகித்தாள். அவள் ஏதோ வஞ்சக நினைவை வைத்துக் கொண்டு தான் நாற்காலியில் உட்கார்ந்து கொள்ளும்படி தன்னை உபசரித்தாள் என்பதும் அவளுக்குத் தெரிந்தது. அந்த விஷயத்தில் லீலாவதி களங்கமற்றவளாக இருந்தால், தனக்கு அபாயம் நேர்ந்தவுடனே அவள் இரக்கமும் விசனமும் கொண்டு பதறிப் போய்த் தன்னிடம் ஓடிவந்து என்ன நேர்ந்தது என்று கேட்டறிந்து கொண்டு தனக்கு அனுதாபமொழி கூறி, அந்த நாற்காலியின் விபரம் இன்னதென்று தனக்குத் தெரிவித்திருப்பதோடு, அதிலிருந்து விடுவித்துக் கொள்வதற்கான மார்க்கத்தைச் சொல்லியோ செய்தோ இருப்பாள் என்ற நினைவு ஷண்முகவடிவினது மனதில் உதித்தது. அவ்வாறு அவள் செய்யாமல் கபடத்தனமாகவும் ஒசை செய்யாமலும் அவ்விடத்திலிருந்து ஓடியது முற்றிலும் சம்சயமான

செய்கையாக இருந்தது. அதுவுமன்றி, அந்த இடம் கமலத்தின் அந்தப்புரமாக இருந்தால், அவ்விடத்தில் அப்படிப்பட்ட வஞ்சக நாற்காலி இருப்பதற்கு நியாயமே இல்லை என்றும், அல்லது, வேறு ஏதேனும் கருத்தோடு அந்த நாற்காலி போடப் பட்டிருந்தாலும், தான், அதன்மேல் உட்காராமல் லீலாவதி தடுக்கவேண்டியதே ஒழுங்காக இருக்க, அதைவிட்டுத் தன்னை உபசரித்து அதில் உட்காரவைத்தது அவளது சம்சயத்தை பலப்படுத்தியது. ஆகவே, லீலாவதி ஏதோ கபடமான கருத்தோடு தன்னை அழைத்து வந்து வேண்டுமென்றே அந்த நாற்காலியில் மாட்டிவிட்டாள் என்ற நிச்சயம் ஏற்பட்டது. உடனே அந்த மடந்தையின் மனதில் கோடானுகோடி எண்ணங்கள் உதித்தன. தன்னிடத்திலும் தனது அக்காளி