பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 47

விட்டு தன் மனதைக் கலைக்கச் செய்து, அது பலியாமல் போனதைக் கண்டு அவ்வாறு தன்னை அந்த நாற்காலியில் மாட்டவைக்கும்படி அவளை ஏவி இருப்பாரோ என்ற நினைவு சிறுகச்சிறுக அவளது மனதில் தலைக்காட்டியது. ஆனாலும், அப்படிப்பட்ட கண்ணியமான பெரிய மனிதர் அத்தகைய அட்டுழியச் செய்கையில் இறங்கமாட்டார் என்றே அவளது மனதில் பட்டது. மறுபடியும் யோசித்துப் பார்த்ததில், அந்தப் பெரியவர் அதற்கு முன் தனது அக்காளையும் ஒருவேளை அப்படியே அந்த நாற்காலியில் மாட்டவைத்து, அவளைக் கெடுத்துத் தமது வசப்படுத்திக் கொண்டிருப்பாரோ என்றும், அதனாலே தான் தனது அக்காள் ஊருக்குத் திரும்பிவர வெட்கி அவ்விடத்திலேயே இருந்துவிட்டாளோ என்ற சந்தேகமும் தோன்றியது. அப்படி இருந்தாலும், தன்னையும் அதே கதிக்கு ஆளாக்கத் தனது அக்காள் இசைந்திருக்க மாட்டாள் என்றும், அவளுக்குத் தெரியாமல் அவர்கள் அவ்வாறு செய்திருக்கலாம் என்றும் அவள் எண்ணினாள். அவ்வாறு அவளது மனதில் எண்ணிறந்த சந்தேகங்கள் ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றின. ஆனாலும், அவள் எதையும் நிச்சயமாக நம்பக் கூடாதவளாக இருந்தாள். மற்ற விஷயங்களைப் பற்றி எல்லாம், அவள் பலவாறு சம்சயங்கொண்டாள். ஆனாலும், அவர்கள் இருவரும் ஆள் மாறாட்டம் செய்திருக்கிறார்கள் என்ற சந்தேகம் மாத்திரம் அவளது மனதில் தோன்றவில்லை. அந்தக் கிழவர்தான் சோமசுந்தரம்பிள்ளை என்றும், அந்தப் பெண் அவரது தங்கையான கண்ணம்மாள் என்றுமே அவள் அப்போதும் உறுதியாக நினைத்துக் கொண்டிருந்தாள். ஏனென்றால், கோலாப்பூரில் தனக்கு நிரம்பவும் உதவிசெய்து சேர்த்தவளான அம் மணிபாயி மோசக்காரி என்று அவள் கனவிலும் நினைத்தவள் அல்ல, ஆதலால், அவள் நல்ல உபகாரகுண முள்ள மனிஷி என்றே அவள் எப்போதும் உறுதியாக எண்ணி இருந்தாள். ஆகையால், அவளால் காட்டப்பட்ட மனிதரான அந்தக் கிழவர் சோமசுந்தரம்பிள்ளை அல்லவென்று சந்தேகம் go.3.IV-4