பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 - பூர்ணசந்திரோதயம் - 4 அவளது உச்சி மயிர் அப்படியே விறைத்து எழுந்து நின்றது. ஒருவிதமான வேதனை உடம்பு முழுதும் பரவியது. அப்படி வருகிற மனிதர்தனக்கு எவ்விதமான தீங்கு விளைவிக்க எண்ணி வருகிறார்களோ என்ற பயம் அவளை நடுக்குவித்தது. அவளது வாய் குழறியது; இருந்தாலும் அவள் ஒருவாறு துணிவடைந்து, ‘யார் அங்கே வருகிறது? கண்ணம்மாளா, அல்லது, வேறே மனிதரா? நீங்கள் யாராயிருந்தாலும் சரி; என்னை முதலில் இந்தக் கொடிய நாற்காலியை விட்டு விடுவியுங்கள். என் உயிர் போய்விடும்போல இருக்கிறது” என்று கூறினாள்.

அவ்விடத்திற்கு வந்த மனிதர் தடதடத்த குரலோடு பேசத் தொடங்கி, ‘பெண்ணே இந்த இடம் இந்த மாளிகையின் நடுமத்தியில் இருக்கிறது. இதைச் சுற்றி நாற்புறங்களிலும் கனமான சுவர்களும் ஏராளமான விடுதிகளும் இருக்கின்றன. ஆகையால், நீ எவ்வளவு பலமாக ஓங்கிக் கூச்சலிட்டு உன் தொண்டையைக் கிழித்துக் கொண்டாலும், உன் குரல் இந்த இடத்துக்கு வெளியில் கேட்கவே கேட்காது. ஆகையால், உனக்கு வேறே யாராவது மனிதர் இங்கே வந்து உதவி செய்வார்கள் என்ற எண்ணத்தையே நீ விட்டுவிட வேண்டும். நீ இந்த நாற்காலியிலிருந்துதப்ப வேண்டுமானால், என்னால்தான் தப்பவேண்டுமே அன்றி, வேறல்ல. நான் உன்னைத் தப்ப வைக்க வேண்டுமானால், நீ என் பிரியப்படி நடந்து கொள்ள வேண்டும். என்ன சொல்லுகிறாய்?” என்றார்.

அவர் பேச ஆரம்பித்தவுடனே ஷண்முகவடிவு அவர் அந்த வீட்டின் சொந்தக்காரரான கிழவர் என்பதைக் கண்டு கொண்டாள். அவர் பேசி முடித்தவுடனே அவரது சொற்களின் பயங்கரமான கருத்தை உள்ளபடி உணர்ந்துகொண்ட அந்த இளநங்கை அளவற்ற வியப்படைந்து பிரமித்து, அந்த மனிதர் பேசியதும், தான்.அதைக் கேட்டதும் நிஜமாக இருக்குமோ என்று பெரிதும் சந்தேகித்து முற்றிலும் குழப்பம் அடைந்த வளாய், “ஐயா! நான்தங்களால் காப்பாற்றப்பட்டு வரும் ஏழைக்